Kuberaa : ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு.. தனுஷின் ‘குபேரா’ முதல் நாள் வசூல் எவ்வளவு?
kuberaa First Day Collection : தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குபேரா. இந்தப் படத்தில் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க அவருடன் பிரபல நடிகர் நாகார்ஜுனாவும் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்துப் பார்க்கலாம்

தனுஷின் குபேரா திரைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் என்னால் சினிமாவில் பல்வேறு பணிகளைச் சிறப்பாக செய்து வருபவர் தனுஷ் (Dhanush). அவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த குபேரா திரைப்படத்தைத் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் முன்னணி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் (Nagarjuna) இணைந்தது நடித்திருந்தார். இந்த படமானது அதிரடி திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது இந்நிலையில், முதல் நாள் முடிவில் இப்படமானது எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
இந்த குபேரா படமானது முதல் நாள் வசூலில் மொத்தமாக சுமார் ரூ.13 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு முன் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான ராயன் (Raayan) படமானது சுமார் ரூ. 15.7 கோடிகளை வசூல் செய்திருந்த நிலையில், ராயன் படத்தை ஒப்பிடும்போது குபேரா குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படமானது வார இறுதியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குபேரா படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :
Sensational word of mouth and packed theatres for #Kuberaa everywhere ❤️🔥
UNANIMOUS MEGA BLOCKBUSTER 💥
Book your tickets now: https://t.co/4LlzXfPwzT #BlockBusterKuberaa #BOXOFFICEKuberaa #SekharKammulasKuberaa pic.twitter.com/Szd5uHOoia
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 21, 2025
குபேரா படம் ரசிகர்கள் மனதை வென்றதா?
இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பான் இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷனும் இப்படத்தில் மிகவும் அருமையாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்த குபேரா படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்திலும், ரசிகர்களிடையே அடுத்தடுத்த காட்சிகள் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாகவே அமைந்திருந்தது.
இதில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவரின் எமோஷனல் காட்சிகளும் அதிகம் வரவேற்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்த குபேரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிச்சயம் இந்தப் படம் தனுஷிற்கு வெற்றிப் படமாகக் குபேரா அமையும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
குபேரா படத்தில் தனுஷ் பெற்ற சம்பளம்
இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த குபேரா, பான் இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டிருந்ததது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போல நடிகர் நாகார்ஜுனாவின் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த படமானது சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் தேவா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் ரூ.30 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் தனுஷிற்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.