Karthi: ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை.. ரசிகர்களை குஷிப்படுத்திய வா வாத்தியார் படக்குழு!
Vaa Vaathiyaar Movie: கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம்தான் வா வாத்தியார். இந்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்ட நிலையில், இன்று வெளியிட்ட பதிவில் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என படக்குழு போஸ்டரை அறிவித்துள்ளது.

வா வாத்தியார்
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumarasamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இறுதியாக கார்த்தியின் நடிப்பில் மெய்யழகன் படம் வெளியான நிலையில், அதை தொடர்ந்து 1 வருடத்திற்கு பின் வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம்தான் வா வாத்தியார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு கடன் தொடர்பான பிரச்சனை வந்த நிலையில், இது சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) வரை சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று 2025 டிசம்பர் 4ம் தேதியில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிபோகுமா? என ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் விதத்தில் படக்குழு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வா வாத்தியார் படம் நிச்சயமாக 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியிடப்பட்டும் என ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. தளபதி விஜயை தொடர்ந்து மகன் செய்யும் சிறப்பான சம்பவம்!
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட புதிய எக்ஸ் பதிவு :
He’s walking in with aura ✨💥#VaaVaathiyaar Worldwide Release on December 12 #VaaVaathiyaarOnDec12 #VaathiyaarVaraar
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical @Karthi_Offl @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj… pic.twitter.com/j7htQuBh3D— Studio Green (@StudioGreen2) December 5, 2025
வா வாத்தியார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது :
இந்த வா வாத்தியார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் மற்றும் ஆனந்தராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது எம்ஜிஆர் ரசிகரின் மகன் குறித்த கற்பனை கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக விற்பனையாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டு உரிமை – படக்குழு வெளியிட்ட அப்டேட்
மேலும் இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்நிகழ்ச்சியானது வரும் 2025 டிசம்பர் 6ம் தேதியில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம். இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.