Chinmayi : உலக டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்த சின்மயி வெர்சன் ‘முத்தமழை’ பாடல்!
Muththa Mazhai Chinmayi Version Song : தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பாடகி சின்மயி முத்தமழை என்ற பாடலை மேடையில் பாடியிருந்தார். இந்த படலானது தற்போது இணையத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றிப் பார்க்கலாம்.

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மற்றும் அபிராமியும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியானது. இந்த படத்திலிருந்து வெளியான பாடல்தான் முத்தமழை (Muththa Mazhai). இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து பல பாடல்கள் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது முத்தமழை. இந்த பாடலின் தமிழ் வெர்சனில் பாடகி தீ (Dhee) பாடியிருந்தார்.
ஆனால் இவர் தக் லைஃப் இசை வெளியீட்டில் அவர் கலந்துகொள்ளாத நிலையில், பாடகி சின்மயி (Chinmayi) பாடியிருந்தார். இந்நிலையில், அவரின் குரலில் வெளியான இந்த முத்தமழை பாடல் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த பாடல் தற்போது உலகளவில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. உலகளவில் ட்ரெண்டிங்கில் 10வது இடத்திலும் மற்றும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் 8வது இடத்தையும் பிடித்துள்ளதாம். இது குறித்த தகவலைத் தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட முத்தமழை சின்மயி வெர்சன் :
Muththa Mazhai Performance
➡️ https://t.co/CN0aI2cYrO#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTRA #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser… pic.twitter.com/eF6pRRP2bz— Raaj Kamal Films International (@RKFI) May 28, 2025
பாடகி சின்மயி முத்தமழை பாடல் :
கடந்த 2018ம் ஆண்டு முதல் பாடகி சின்மயி தமிழ் சினிமாவில் எந்தப் படங்களிலும் பாடல்களைப் பாடவில்லை. இவர் டப்பிங் யூனியனில் சந்தா சரியாகக் கட்டவில்லை எனக் கூறி, படங்களில் டப்பிங் செய்யவும் மற்றும் பாடல்களைப் பாடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவருக்கு மேடையில் பாடும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில், மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
தக் லைஃப் படத்தில் முத்தமழை பாடலின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்சனையும் பாடகி சின்மயித்தான் பாடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழிலும் இவர் பாடிய பாடலைத்தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
மீண்டும் படங்களில் பாடத் தொடங்கிய சின்மயி :
பாடகி சின்மயி தமிழ் சினிமாவில் சுமார் 6 வருடங்களுக்கும் மேலாக எந்த படங்களிலும் பாடல்களைப் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவர் தக் லைஃப் படத்திலிருந்து முத்தமழை என்ற பாடலை பாடி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் டி இமானின் இசையமைப்பில் புதிய படம் ஒன்றில் பாடலை பாடியிருக்கிறார்.
இந்த தகவல் தொடர்பாக இசையமைப்பார் டி இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் தனது மகிழ்ச்சியையும் இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.