குக் வித் கோமாளி ரசிகர்களை தயாரா? ‘குக் வித் கோமாளி சீசன் 7ல்’ எல்லாமே புதுசு!

Cook with Comali Season 7 Update: தமிழில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருவது குக் வித் கோமாளி. இது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவருகிறது. 2026ம் ஆண்டிற்கான குக் வித் கோமாளி சீசன் 7ம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி ரசிகர்களை தயாரா? குக் வித் கோமாளி சீசன் 7ல் எல்லாமே புதுசு!

குக் வித் கோமாளி

Updated On: 

23 Feb 2026 19:40 PM

 IST

தமிழ் மக்கள் மத்தியில் சினிமாவை விடவும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பிரபலம். அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் (Reality shows) மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக தமிழில் தொலைக்காட்சிகள் டிஆர்பி-யை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக சீரியல்களை தொடர்ந்து, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீதும் கவனம் செலுத்திவருகின்றனர். அந்த வகையில் தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி (Cook with Comali) . இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Star Vijay TV) ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியாயினது சமையல் வல்லுநர்கள் மற்றும் நகைச்சுவையாளர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆரம்பமானது.

இந்நிலையில் இதுவரை கிட்டத்தட்ட 6 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது 2026ம் ஆண்டு தொடங்கிவிட்ட நிலையில், குக் வித் கோமாளி சீசன் 7 (Cook with Comali Season 7) நிகழ்ச்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 7ல் பல புதிய மாற்றங்கள் நடக்கவுள்ளதாம்.

இதையும் படிங்க: 19 ஆண்டுகளை நிறைவு செய்தது கார்த்தி நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் படம்

குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி அப்டேட் :

குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது மக்களிடையே மிகவும் வரவேற்கப்படும் ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போதுவரையிலம் வரவேற்கப்படுகிறது. இதில் இறுதியாக வெளியான சீஸனின் மாதம்பத்திரங்கராஜ் மற்றும் செப் தாமு போன்றவர்கள் இருந்தனர். அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் டைட்டில் வின்னராக பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் வெற்றிபெற்றிருந்தார்.

இதையும் படிங்க: ‘பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது’ – அஜித் குமாரின் ரேஸ் அனுபவத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு!

இது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. மேலும் சீசன் 7 விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்த குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் புதிய கோமாளிகள் மற்றும் புதிய போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளார்களாம். மேலும் கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், நடுவருக்கு புதிதாக மாற்றப்படுகிறாராம். அதன்படி செஃப் வினோத் குமார் சீசன் 7ல் நடுவராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செப் வினோத் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

மேலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மீது எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியானது, வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!