பிக்பாஸில் இந்த வார வீட்டு தல இவர்தானா? வெளியானது வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று 9-வது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நடைப்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் யார் வெற்றிப் பெற்றார்கள் என்பது குறித்த வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பிக்பாஸில் இந்த வார வீட்டு தல இவர்தானா? வெளியானது வீடியோ

பிக்பாஸ்

Published: 

01 Dec 2025 11:52 AM

 IST

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது 9-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த சீசனில் மொத்தம் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் சேர்த்து 24 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் நேற்று 8-வது வார இறுதியில் நோ எவிக்‌ஷன் என்று விஜய் சேதுபதி கூறியதால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 3-வது வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதிரை மீண்டும் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இதன் காரணமாக தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஆதிரை வீட்டை விட்டு வெளியேறிய போதே பார்வையாளர்கள் தங்களது அதிருப்த்தியை வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர். அதன்படி இவர் நன்கு விளையாடும் போட்டியாளர் இவரை வெளியே அனுப்பியது நன்றாக இல்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஆதிரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த வாரம் பிக்பாஸில் வீட்டு தல இவர்தான்:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் சிறப்பாக பங்கேற்றதாக ரம்யா ஜோ மற்றும் பிரஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். கடந்த வாரம் வீட்டு தலையாக இருந்த எஃப்ஜே சிறப்பாக பங்கெடுக்கவில்லை என்று ஜெயிலுக்கு சென்றதால் அவர் இந்த வாரம் தல போட்டியில் பங்கெடுக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த ஆதிரை மற்றும் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ரம்யா ஜோ மற்றும் பிரஜன் அகியோர் இந்த வாரத்திற்கான வீட்டு தல போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் சரியாக விளையாடி ரம்யா ஜோ வெற்றிப்பெற்ற நிலையில் அவர் இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியுள்ளார்.

Also Read… ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க… நடிகர் சிம்புவின் நியூ லுக்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? ஒரு மாஸ் நடிகர் தான்

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!