பத்த வச்சுட்டியே பரட்ட… பிக்பாஸில் முதல் நாளே கிளம்பிய சர்ச்சை – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று பிரபமாண்டமாக தொடங்கியது. இந்த சீசனிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பத்த வச்சுட்டியே பரட்ட... பிக்பாஸில் முதல் நாளே கிளம்பிய சர்ச்சை - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

06 Oct 2025 11:15 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி நேற்று 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சி பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள், சமூகவலைதளப் பிரபலங்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் அரோரா, திவாகர், எஃப்ஜே, துஷார், விஜே பார்வதி, கனி திரு, சபரிநாதன், கெமி, ஆதிரை, பிரவீன் காந்தி,  ரம்யா ஜோ, வியானா, கானா வினோத், சுபிக்‌ஷா குமார், அப்சரா, கம்ருதின், பிரவீன் ராஜ் தேவ், நந்தினி, கலையரசன் உட்பட 20 பேர் இந்த போட்டியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நீலம் மற்றும் சிகப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீலம் நிறத்தை தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் பிக்பாஸில் அவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் அறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கழிவறையில் இருந்து முற்றிலுமாக பிக்பாஸ் வீடு மாறுபட்டு உள்ளது. நேற்று வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வீட்டில் செட்டில் ஆனதுடன் நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

ஒரு நாளுக்கு மேல ஒன்னும் இல்ல இவர்கிட்ட:

இந்த நிலையில் அந்த முதல் ப்ரோமோ வீடியோவே சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளது. அதன்படி ஒரு நாள் கூத்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த டாஸ்கில் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் ஒரு நாள் கண்டெண்ட் மட்டுமே வைத்துள்ளனர். அதற்குமேல் அவர்களிடம் செய்ய ஒன்றும் இல்லை என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்படுகின்றது.

அதற்கு வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு தோன்றும் நபர்களை தெரிவிக்கின்றனர். அதில் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டபடி திவாகர், வியானா மற்றும் அப்சராவை மற்ற போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் டைட்டில் விவகாரம் – நீதிமன்றம் கொடுத்த மாஸ் உத்தரவு

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது கற்றது தமிழ் படம்