மீண்டும் பள்ளிக்கு போகலாம்… ரெசிடன்சியல் ஸ்கூலாக மாறிய பிக்பாஸ் வீடு
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி 7 வாரங்கள் முடிவடைந்து 8-வது வாரம் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் ரெசிடென்சியல் ஸ்கூலாக மாறியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் மாறி போட்டிப் போடுகின்றனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் சேர்ந்து 24 பேர் கலந்துகொண்டனர். இதில் இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவகர் மற்றும் கெமி ஆகியோர் இதுவரை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வாரம் வாரம் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்று விஜய் சேதுபதிதான் அறிவிப்பார். ஆனால் கடந்த 7-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ஷன் ப்ராசஸ் மிகவும் வித்யாசமாக நடைப்பெற்றது பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
தொடர்ந்து 7 வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 8-வது வாரம் தொடங்கி உள்ளது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 2-வது முறையாக எஃப்ஜே பிக்பாஸ் வீட்டில் வீட்டு தலையாக வெற்றிப் பெற்றுள்ளார். அதன்படி கடந்த வாரமும் எஃப்ஜே தான் வீட்டு தலையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் இவர்தான் இரண்டாவது முறையாக வீட்டு தலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசசில் திவ்யா, பார்வதி, விக்ரம், கம்ருதின், கனி, சாண்ட்ரா, பிரஜின், அரோரா, அமித், வியானா மற்றும் ரம்யா ஜோ ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இருந்து யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்பது வார இறுதியில் தெரியவரும்.
ரெசிடன்சியல் ஸ்கூலாக மாறிய பிக்பாஸ் வீடு:
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு டாஸ்க் வழங்கப்படுகின்றது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீடு ரெசிடன்சியல் ஸ்கூலாக மாறியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் மாறி போட்டியிடுகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சூர்யாவின் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day51 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/nzMGRDQsSR
— Vijay Television (@vijaytelevision) November 25, 2025