Biggboss 9 Tamil: எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. விஜய் சேதுபதிக்கு குவியும் கோரிக்கை!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் மற்றும் பேசும் பேச்சுக்கள் இரட்டை அர்த்தத்தில் இருப்பதாகவும், கைகலப்பை தூண்டும் விதமாகவும் உள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

Biggboss 9 Tamil: எல்லை மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி.. விஜய் சேதுபதிக்கு குவியும் கோரிக்கை!

பிக்பாஸ் சீசன் 9

Updated On: 

24 Oct 2025 12:58 PM

 IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதற்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி கடிவாளம் போட வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சிலம்பரசன் ஆகியோரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, அரோரா, எப்ஜே அதிசயம், துஷார், கனி, இயக்குனர் பிரவீன் காந்தி, வைஷாலி கெம்கர்,  ஆதிரை சௌந்தர்ராஜன், ரம்யா ஜோ, வியானா, கானா வினோத், பிரவீன், சுபிக்ஷா, திருநங்கை அப்சரா, கம்ருதீன், நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதில் நந்தினி தனிப்பட்ட காரணங்களால் வெளியேற பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய சர்ச்சைகள் தொடர்ச்சியாக வெடித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு வாரம் விஜய் சேதுபதி மற்றும் பிக் பாஸ் நிர்வாகம் சார்பில் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என இதனை தொடர்ந்து பார்வையிட்டு வரும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களோடு பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக நட்பு, காதல் என்கிற பெயரில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் செய்யும் செயல்களும், பேசும் பேச்சுகளும் இரட்டை அர்த்ததில் இருப்பதாகவும்,  கைகலப்பில் ஈடுபட தூண்டும் வார்த்தைகளை உபயோகிப்பதாகவும் என நிகழ்ச்சி நாளுக்கு நாள் வேறு பரிணாமத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பொழுதுபோக்கு என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதனை மிகவும் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேர நேரலை சென்று கொண்டிருப்பதால் பலரும் அதன் வீடியோ கிளிப்சை சமூக வலைதளத்தில் பகிர்ந்து எந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி தெளிவாக எடுத்துரைத்து வருகின்றனர். எனவே வார இறுதியில் வரும் விஜய் சேதுபதி இதனை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.