பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தாகல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9

Published: 

28 Sep 2025 18:04 PM

 IST

பிக்பாஸ் (Bigg Boss Tamil 9) நிகழ்ச்சி என்பது ரசிகர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர்கள் பிரபலங்கள் பலர் வெள்ளித்திரைக்கு செல்ல ஒரு பாலமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் தொடர்ந்து வெள்ளித்திரையில் தற்போது நல்ல இடத்தில் இருக்கிறார். வாய்ப்பும் தொடர்ந்து கிடைப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து 8 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8-வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார்.

அதன்படி 9-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க உள்ளது புரோமோ வீடியோவைப் பார்க்கும் போதே தெரிகின்றது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகின்ற 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்கட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா?

இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களாக யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகர் சித்து, பாரதி கண்ணம்மா சீரியல் ஃபரினா ஆசாத், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சீரியல் நடிகை ஜனனி, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் மற்றும் பாக்யலட்சுமி சீரியல் நடிகை என பலரது பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே யார் போட்டியாளர் என்று தெரியவரும்.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK64 படத்தின் பணிகள் – வைரலாகும் போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இமையே… இமையே… 12 ஆண்டுகளை நிறைவு செய்தது அட்லியின் ராஜா ராணி படம்