சுற்றுச்சூழல் விவகாரம்… பிக் பாஸ் ஸ்டுடியோவை மூட அரசு அதிரடி உத்தரவு

Bigg Boss: இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் விவகாரம்... பிக் பாஸ் ஸ்டுடியோவை மூட அரசு அதிரடி உத்தரவு

பிக் பாஸ்

Published: 

07 Oct 2025 20:59 PM

 IST

வெளிநாடுகளில் பிக் பிரதர் என்ற அழைக்கப்பட்ட நிகழ்ச்சி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் பிக்பாஸ் (Bigg Boss) என்ற பெயரில் தொடங்கியது. அதன்படி இந்தியாவில் முதன்முறையாக இந்தி சினிமாவில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது இந்தி சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 19-வது சீசன் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழில் பிக்பாஸ் சீசன் 9 தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்த நிகழ்ச்சி தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டில் இந்தி , கன்னடா, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடங்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!

பிக் பாஸ் ஸ்டுடியோவை மூட அரசு அதிரடி உத்தரவு:

அதன்படி கன்னட சினிமாவில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு பிக்பாஸ் கன்னட 12-வது சீசன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் பிடாடி தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள மெசர்ஸ் வேல்ஸ் ஸ்டுடியோ அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனத்தை சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாததற்காக மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஸ்டூடிவோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி செட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… 100 – 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் என்னைப் போலவே நினைத்தார் – சிலம்பரசன்