திடீரென திருமணம் செய்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

Roshini Haripriyans Wedding Video: பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷ்னி ஹரிபிரியன். இவர் திடீரென இன்று 2026 பிப்ரவரி 15ம் தேதியில் அவர் சுந்தரமூர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திடீரென திருமணம் செய்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!

ரோஷினி ஹரிப்ரியனின் திருமணம்

Updated On: 

15 Feb 2026 16:59 PM

 IST

தமிழில் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா (Bharathi Kannama) என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் (Roshini Haripriyan). இவர் இந்த சீரியலில் கண்ணம்மா என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். இந்த் சீரியலானது கடந்த 2019ம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்டுவந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டுடன் நிறைவடைந்துவிட்டது. இந்த சீரியலில் நடிகர் அருண் (Arun) என்பவருக்கு ஜோடியாக நடித்து பிரபாலமானார். இந்த சீரியலின் மூலமாக இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் சூரி (Soori), சசிகுமார் (Sasikumar) மற்றும் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான கருடன் (Garudan) படத்தில், நெகடிவ் கலந்த வேடத்தில் நடித்திருந்தார். இதில் உன்னி முகுந்தனின் (Unni Mukundan) மனைவி வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த நிலையில், இவர் தற்போது திடீரென திருமண பந்தத்தில் இணைந்துள்ளர். இவர் தனது காதலரான கே.சுந்தரமூர்த்தி (Sundaramurthy) என்பவரை, இன்று 2026 பிப்ரவரி 15ம் தேதியில் கரம்பிடித்துள்ளார். இவரின் திருமணத்திற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பல தடைகளையும் தாண்டி தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தை செய்த நாஞ்சில் விஜயன் – வைரலாகும் வீடியோ!

நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் திருமணம் குறித்த வைரலாகும் பதிவு:

நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் இன்று 2026 பிப்ரவரி 15ம் தேதியில், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் தனது காதலரான சுந்தரமூர்த்தி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நடிகைகளான ஃபரினா ஆசாத், கண்மணி மனோகரன் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் தங்களின் இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் நடித்த திரைப்படம்:

நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் கிட்டத்தட்ட 4 படங்களில் நடித்துள்ளார். அதிலும் கடந்த 2025ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் மெட்ராஸ் மேட்ரிமோனி என்ற படத்தில் லீட் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். இந்த படமானது மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து, 2025 ஜூலை மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பு இதோ!

இப்படத்தில் விஜய் சேதுபதி தங்கை ராகவர்தினி வேடத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். மேலும் புது படங்களில் நடிப்பதற்கும் இவர் ஒப்பந்தமாகிவரும் நிலையில், தற்போது திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?