OTT Movies: மிரட்டலான ஒரு ஆக்‌ஷன் படம்.. எந்த ஓடிடி தெரியுமா?

2019ல் வெளியான "டிரிபிள் ஃப்ரண்டியர்" திரைப்படம், கொலம்பியாவில் போதைப்பொருள் கும்பலை எதிர்த்துப் போராடும் முன்னாள் டெல்டா படையினரின் சாகசங்களை விவரிக்கிறது. பென் அஃப்லெக், சார்லி ஹுன்னம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த இப்படம் மிக நீண்ட கால எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

OTT Movies: மிரட்டலான ஒரு ஆக்‌ஷன் படம்.. எந்த ஓடிடி தெரியுமா?

Triple Frontier படம்

Published: 

06 Jul 2025 14:00 PM

பொதுவாக வீர, தீர சாகசங்களை கொண்ட ஆக்‌ஷன் படங்கள் என்றால் சொல்லவா வேண்டும். அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அப்படியான படங்கள் ஆண்டுதோறும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது வழக்கம். அந்த வகையில் ஹாலிவுட்டில் 2019 ஆம் ஆண்டு வெளியான Triple Frontier படம் பற்றிப் பார்க்கலாம். ஜே.சி. சாந்தோர் இயக்கிய இப்படத்தின் திரைக்கதையை அவர், மார்க் போலுடன் இணைந்து எழுதியிருந்தார். இந்த படத்தில் பென் அஃப்லெக்,சார்லி ஹுன்னம்,ஆஸ்கார் ஐசக்,காரெட் ஹெட்லண்ட்,பெட்ரோ பாஸ்கல்,அட்ரியா அர்ஜோனா என குறிப்பிட்ட சில கேரக்டர்களே நடித்திருந்தனர். ரோமன் வாஸ்யனோவ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு டிசாஸ்டர்பீஸ் இசையமைத்திருந்தார். இப்படம் பற்றிய பல்வேறு தகவல்களைக் காணலாம்.

படத்தின் கதை 

தனியார் இராணுவ ஆலோசகராக உள்ள ஹீரோ சாண்டியாகோ போப் கார்சியா, கொலம்பியாவில் ஊடுருவியுள்ள போதைப்பொருள் கும்பல்களை எதிர்த்துப் போராடும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணிபுரிகிறார். அவரிடம் யோவன்னா என்ற ஒரு உளவாளி போதைப்பொருள் தலைவன் கேப்ரியல் மார்ட்டின் லோரியாவின் இருப்பிடத்தை சொல்கிறார். அதேசமயம் அதற்கு ஈடாக நாட்டை விட்டு வெளியே தன்னையும் தனது சகோதரனையும் கடத்த உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.

அவரது தகவலின்படி, காட்டில் உள்ள ஒரு தொலைதூர வீட்டில் 75 மில்லியன் டாலர் பணத்துடன் லோரியோ வசிப்பதாக கூறுகிறார். ஒருபக்கம் அரசுடன் இணைந்து வேலை செய்வது போல் காட்டிக் கொண்டு, மறுபக்கம் அந்த பணத்தை பறிமுதல் செய்ய தனது முன்னாள் டெல்டா படை அணியினரை போப் அனுப்பி வைக்கிறார். பிளானும் போடப்படுகிறது. லோரியோ குடும்பத்தினர் சரியாக தேவாலயம் செல்லும்போது பணத்தை திருட முடிவு செய்யப்படுகிறது. அங்கு லோரியோ மற்றும் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.

ஆனால் பல ட்விஸ்டுகள் நிறைந்த நிகழ்வுகளை உணருகிறார்கள். இறுதியாக இந்த டெல்டா படையினரிடன் திட்டம் நிறைவேறியதா என்பதே இப்படத்தின் கதையாகும்.

ஓடிடி தகவல்கள்

2010 ஆம் ஆண்டு இப்படம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்தது. 2011ல் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடுவில் நடந்த தடைகள் காரணமாக 9 ஆண்டுகள் படம் வெளியாக காரணமாக அமைந்தது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்ற இப்படம் தியேட்டரில் வெளியாகி வசூலிலும் மகத்தான சாதனைப் படைத்தது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பார்த்து மகிழுங்கள்.