Kamal Haasan : கன்னடம் குறித்த கருத்து தெரிவிக்கக் கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
Kamal Haasan Ban From Commenting On Kannada : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவரின் தக் லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, கன்னட மொழி குறித்து சர்ச்சைகள் இருந்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் கன்னடம் பற்றி கருத்து தெரிவிக்கப் பெங்களூரு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என இவர் செய்யும் விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் எழுதி, தயாரித்து மற்றும் நடித்திருந்த தக் லைஃப் (Thug Life) திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியான நிலையில், அதற்கு முன் 2025, மே 24ம் தேதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழி (Kannada language) குறித்து பேசியது சர்ச்சையானது.
இதனைக் காரணமாகக் காட்டி, இப்படம் கர்நாடகா திரையரங்குகளில் வெளியிட கர்நாடக உயர்நீதிமன்றம் தடை வித்திருந்தது. அதைத் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது பெங்களூரு நீதிமன்றம் (Bangalore Court) நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னடம் மொழி, கலாச்சாரம், நிலம் மற்றும் இலக்கியங்கள் குறித்து கருத்து தெரிவிக்கத் தடை விதித்துள்ளது. தற்போது இந்த தகவலானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.




தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் :
கடந்த 2025, மே 24ம் தேதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்குச் சிறப்பு விருந்தினராகக் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் கலந்துகொண்டார். அந்த மேடையில் பேசிய கமல்ஹாசன் நடிகர் சிவராஜ்குமாரிடம் “எங்களின் மொழியிலிருந்துதான் உங்களின் மொழி வந்தது” என கூறியிருந்தார். இது இசை வெளியீட்டு விழாவிற்குப் பின் பெரும் சர்ச்சையாக உருவாகியிருந்தது.
இதற்காகக் கர்நாடகாவில் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த மொழி பிரச்னை பூகம்பமாக வெடித்த நிலையில், கன்னட மொழியில் தக் லைஃப் படத்தை வெளியிடக் கர்நாடகா நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கமல்ஹாசனை நீதிமன்றம் மன்னிப்பு கேட்குமாறு கூறியிருந்தது.
ஓடிடி ரிலீஸ் குறித்து தக் லைஃப் திரைப்பட எக்ஸ் பதிவு :
When the Thug Rises the World Watches!#Thuglife streaming on @Netflix_INSouth from today#ThugLifeOnNetflix
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A @dop007 @RKFI… https://t.co/8nygaoh1ta— Raaj Kamal Films International (@RKFI) July 3, 2025
ஆனாலும் கமல்ஹாசன் மன்னிப்பு என கேட்காத நிலையில், விசாரணை தள்ளிப்போனது. பின் படம் ரிலீசாகி 2 வாரங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தக் லைஃப் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. ஆனாலும் இப்படமானது கர்நாடகாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.