தாய் கிழவி பிரிவியூ ஷோ முடிந்ததும் சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து அழுத நடிகர் பால சரவணன் – வைரலாகும் வீடியோ
Bala Saravanan gets emotional at Thaai Kizhavi premiere show event: தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் பால சரவணன். இவர் தற்போது தாய் கிழவி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து அழும் பால சரவணன்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஒளிபரப்பான கன காணும் காலங்கள் கல்லோறியின் கதை (Kana Kaanum Kaalangal Kalloriyin Kadhai) என்ற சீரியலின் மூலம் அறிமுகம் ஆனார் நடிகர் பால சரவணன். அதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான குட்டிப்புலி என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் பால சரவணன். இந்தப் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த இவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் பால சரவணன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக தொடர்ந்து வரவேர்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நடிகர் பால சரவணன் நாயகன்களின் நண்பனாக தனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் பால சரவணன் நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும், டார்லிங், வேதாளம், ஒரு நாள் கூத்து, கூட்டத்தில் ஒருத்தன் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் பால சரவணன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் பால சரவணன் நடிப்பில் அடுத்தடுத்து 9 படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனை கட்டி அணைத்து அழுத நடிகர் பால சரவணன்:
இந்த நிலையில் தற்போது பால சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் தாய் கிழவி. நடிகை ராதிகா சரத்குமார் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவரது மகனாக நடிகர் பால சரவணன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரிவியூ ஷோ நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு பால சரவணன் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயனையும் படத்தின் இயக்குநரான சிவக்குமார் முருகேசனையும் கட்டி அணைத்து அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சினிமாவில் புதிய அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்… உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் வைரலாகும் பால சரவணன் வீடியோ:
Bala Saravanan gets emotional and hugged #Sivakarthikeyan after the #ThaaiKizhavi premiere show 🥺❤️ pic.twitter.com/hAqS6GymSG
— Sekar 𝕏 (@itzSekar) February 25, 2026
Also Read… தொடங்கியது தாய் கிழவி படத்தின் டிக்கெட் புக்கிங்… வெளியானது அறிவிப்பு