Ayyanar Thunai: லண்டனுக்கு டூர் சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா – அழகிய போட்டோஸ் இதோ!

Madhumitha Hirannaiahs London Trip: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக இருந்துவருவது அய்யனார் துணை. இந்த சீரியலில் நிலவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவருபவர் நடிகை மதுமிதா. இவர் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Ayyanar Thunai: லண்டனுக்கு டூர் சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா - அழகிய போட்டோஸ் இதோ!

மதுமிதா ஹிரண்ணையா

Updated On: 

27 Apr 2026 20:28 PM

 IST

விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாகிவருகிறது. அதில் டிஆர்பி ரேட்டிங்கிலும் (TRP Rating) சரி, கதை வாரியாக மக்களுக்கு நெருக்கமான சீரியலாக இருந்துவருவதுதான் அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியல், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை, தினமும் இரவு 08:30 மணியளவில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலில் நிலவாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர்தான் நடிகை மதுமிதா ஹிரன்னையா (Madhumitha Hirannaiah). இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜனனி என்ற வேடத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியலானது சிறப்பாக நிறைவடைந்த நிலையில், இதையடுத்து தற்போது இவர் நடித்துவரும் சீரியல்தான் அய்யனார் துணை.

இந்த சீரியலில் லீட் நாயகியாக நடிக்க இவருக்கு ஜோடியாக அரவிந்த் நடித்துவருகிறார். இந்த சீரியலின் ஷூட்டிங்கில் பிசிடியாக இருந்த நடிகை மதுமிதா ஹிரன்னையா, நண்பர்களுடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்கு சுற்றுலா சென்றது தொடர்பான பதிவை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தை பார்த்தவர்கள் இதுதான் சொன்னார்கள்… நடிகர் சூர்யா கொடுத்த அப்டேட்

லண்டனுக்கு சுற்றுலா சென்றது குறித்து நடிகை மதுமிதா ஹிரன்னையா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

அந்த பதிவில் நடிகை மதுமிதா ஹிரன்னையா, “Don’t mind me, I’m just Big Ben-ding the rule” என கூறியுள்ளார். தற்போது அவர் பகிர்ந்த போட்டோக்களுக்கு பல்வேறு ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். மேலும் இவர் அய்யனார் துணை சீரியலில் பிசியாக நடித்துவந்த நிலையில், அவரின் விடுமுறை நாட்களை லண்டனில் கழித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது சென்னை-28 படம்!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரட்டும் அய்யனார் துணை சீரியல்தான், இந்த தொலைக்காட்சியில் அதிகம் டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியலாக இருந்துவருகிறது. அய்யனார் துணை சீரியலில் நிலா சோழன் என்ற வேடத்தில் இவர் நடித்துவரும் நிலையில், இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரமே அதிகம் மக்களால் விரும்பப்படும் கதாபாத்திரமாக இருக்கிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு, பிறகு தற்போது விஜய் டிவி ரசிகர்களையும் நடிகை மதுமிதா கவர்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து, புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?