Mr. X Movie: ஆர்யா – கௌதம் கார்த்திக்கின் ‘மிஸ்டர் எக்ஸ்’ பட ரிலீஸ் எப்போது? – படக்குழு அறிவிப்பு!

Mr. X Movie Release Date: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்துவருபவர்கள் ஆர்யா மற்றும் கௌதம் ராம் கார்த்திக். இவர்கள் இருவரின் கூட்டணியில் தயாராகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் மிஸ்டர் எக்ஸ். இப்படடம் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Mr. X Movie: ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் மிஸ்டர் எக்ஸ் பட ரிலீஸ் எப்போது? - படக்குழு அறிவிப்பு!

மிஸ்டர் எக்ஸ் திரைப்படம்

Updated On: 

06 Apr 2026 17:37 PM

 IST

நடிகர் ஆர்யாவின் (Arya) நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர், நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கின் (Gautham Ram Karthik) கூட்டணியில் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் “மிஸ்டர் எக்ஸ்” (Mr.X). முற்றிலும் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங், கடந்த 2025ம் ஆண்டிலே முழுமையாக நிறையவடைந்திருந்தது. இப்படத்தை விஷ்ணு விஷுலின் FIR திரைப்படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் மனு ஆனந்த் (Manu Anand) இயக்கியுள்ளார். இதில் ஆர்யா லீட் நடிகராக நடித்துள்ள நிலையில், அவருடன் கௌதம் ராம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar), மஞ்சு வாரியர் (Manju Warrier), அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி மற்றும் காளி வெங்கட் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

முற்றிலும் அதிரடி ஆக்ஷன் படம் தயாராகியிருந்த நிலையில், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 17ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் படத்தில் இணைந்த நடிகர் கென் கருணாஸ்… வைரலாகும் தகவல்

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

மிஸ்டர் எக்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ராணுவ உளவாளியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நட்பே துணை திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அனகா நடித்துள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து முதல் பாடல் கடந்த 2025ம் ஆண்டிலே வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

அதைத் தொடர்ந்து தற்போது இந்த 2026ம் ஆண்டில் இப்பாடம் வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து தொடர்நது அப்டேட்டுகள் வெளியாகிவருகிறது. இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது. அதன்படி இப்படத்தை 13 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக்கிற்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்