Lokah Chapter 2 : லோகா பார்ட் 2 படத்தில் நடிக்கும் தமிழ் நடிகர்.. அட இவரா?
Lokah Chapter 2 Update : கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தின் இறுதியியில் வெளியான திரைப்படம்தான் லோகா. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி நடிகையாக நடித்திருந்தார். இப்படத்தின் பார்ட் 2 உருவாகும் நிலையில், இதில் மேலும் ஒரு தமிழ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

லோகா சாப்டர் 2 படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1 : சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்த படத்தை மலையாள நடிகர் டோமினிக் அருண் (Dominic Arun) இயக்கியிருந்தார். இப்படமானது மலையாள சினிமாவில் வெளியாகியிருந்தாலும், ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan), வேஃபரர் பிலிம்ஸ் என்ற பேனரில் கீழ் தயாரித்திருந்தார். லோகா 1 படமானது, கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது வேம்பயர் கதைக்களத்தில் அமைந்திருந்தது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் (Naslen) இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்தின் பாகம் 1-க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதை அடுத்ததாக இப்பாடமானது சுமார் 5 பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகா பாகம் 2ல் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது வேறு யாரும்மில்லை, அது நடிகர் அருண் விஜய்தான்.
இதையும் படிங்க : லோகா 2 படத்தில் அவர்தான் ஹீரோ.. துல்கர் சல்மான் சொன்ன சப்ரைஸ்!
லோகா படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
Kerala’s Lokah fever still burning bright! 🌟 Just added 365+ new late-night shows 🚨 Who’s in for a midnight movie night? Let us know! #LokahMovie#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko… pic.twitter.com/wgOvazL5aL
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 6, 2025
இந்த லோகா படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் மற்றும் தமிழ் நடிகர் சாண்டி மாஸ்டர் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் கேமியோ வேடத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க : செம ஹேப்பியில் ஜி.வி.பிரகாஷ் குமார்.. தேடி வந்த இன்னொரு விருது!
இந்நிலையில் லோகா பார்ட் 2 படத்தில் சாண்டி மாஸ்டருடன், மேலும் அருண் விஜயும் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது.
லோகா திரைப்படத்தின் வசூல் விவரம்
மேலும் சமீபத்தில் லோகா படக்குழுவிற்கு சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். சூர்யா46 பட ஷூட்டிங் ஸ்பாட்டில், லோகா படக்குழுவை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியிருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படமானது மொத்தமாக சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளததாக கூறப்படுகிறது. இப்படமானது விரைவில் ரூ 200 கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த பாகங்களின் அப்டேட் விரைவில் வெளியாகவும் என கூறப்படுகிறது.