அருள் நிதி – மம்தா மோகந்தாஸ் நடிப்பில் உருவாகும் மை டியர் சிஸ்டர் – அறிமுக வீடியோ இதோ

My Dear Sister Movie: நடிகர் அருள் நிதி மீண்டும் கிராமத்து கதைப் பின்னணியில் உருவாக உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். அதன்படி இவர் நடிக்க உள்ள படத்திற்கு மை டியர் சிஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டதாக அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

அருள் நிதி - மம்தா மோகந்தாஸ் நடிப்பில் உருவாகும் மை டியர் சிஸ்டர் - அறிமுக வீடியோ இதோ

மை டியர் சிஸ்டர்

Published: 

11 Nov 2025 19:30 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அருள்நிதி (Actor Arulnidhi). இவர் முன்னதாக தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து வந்த நிலையில் பிறகு சிட்டி பையனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான கடந்த சிலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் அருள் நிதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை மம்தா மோகந்தாஸ் அருள் நிதியின் அக்காவாக நடித்துள்ளார். எப்போதும் சண்டையிட்டுக்கொள்ளும் அக்கா தம்பியின் கதையை மையமாக வைத்து இர்ந்தப் படம் உருவாக உள்ளது படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ஜெயராம் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார்.

அருள் நிதி – மம்தா மோகந்தாஸ் நடிப்பில் உருவாகும் மை டியர் சிஸ்டர்:

பிரபல தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மை டியர் சிஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் நடிகர்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த மை டியர் சிஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read… திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1… படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!

மை டியர் சிஸ்டர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காமெடி வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ ஹார்ஸ்டார் ஓடிடியில் உள்ள இந்த சட்னி சாப்பாரை மிஸ் செய்யாதீர்கள்