Arjun Das: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட டைட்டில் டீசர்!

Con City Movie Title Teaser : தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். இவரின் நடிப்பிலும், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்திலும் தயாராகிவரும் படம்தான் கான் சிட்டி. தற்போது இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Arjun Das: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட டைட்டில் டீசர்!

கான் சிட்டி திரைப்பட டைட்டில் டீசர்

Updated On: 

06 Mar 2026 12:40 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழப்படுபவர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கும்கி 2 (Kumki 2) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் பாரி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் வெப் தொடரிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் (Harish Durairaj) இயக்கத்தில், இவர் நடித்துவரும் புது திரைப்படம்தான் கான் சிட்டி (Con City). இந்த படத்தை பவர் ஹவுஸ் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷென் ரோல்டன் இசையமைத்துவருகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, நடிகர்கள் அன்னா பென் (Anna Ben), யோகி பாபு (Yogi Babu) மற்றும் வடிவுக்கரசி போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், சமீபத்தில் இதன் டைட்டில் போஸ்டர் வெளியானது. இந்த படமானது பணம் தரும் ஒரு மிஷினை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று 2026 மார்ச் 6ம் தேதியில் இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நிற உடையில்.. ஒன்றாக திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய் மற்றும் திரிஷா – வைரலாகும் வீடியோ!

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட டைட்டில் டீசர் குறித்த எக்ஸ் பதிவு:

இந்த டைட்டில் டீசரில் பணம் இல்லாமல் கஷ்டப்படும் நடுத்தர குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்திற்கு பணம் தரும் மிஷின் ஒன்று கிடைக்கிறது. அந்த மிஷினில் ஒரு பட்டனை அழுத்தினாள் பணம் கிடைக்கிறது. அர்ஜுன் தாஸ் இதை வைத்து பணத்தை எடுத்து தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து வைக்கிறார்.

இதையும் படிங்க: உண்மை கதையில்… செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியானது!

மேலும் அவரின் மனைவி, அத்தை மற்றும் அவரின் குழந்தை என அனைவரும் யாருக்கும் தெரியாமல் அதன் மூலமாக பணத்தை எடுக்கின்றனர். இதுவே இந்த டைட்டில் டீசரில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒவ்வுறு நடிகர்களின் கதாபாத்திரங்களும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ரிலீஸ் எப்போது:

இந்த படமானது முழுக்க பேண்டஸி, பேமிலி பொழுதுபோக்கு போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது. பணம் இல்லாமல் கஷ்டப்படும் ஒரு குடும்பத்திற்கு, ஒரு மிஷினால் பணம் கிடைக்கிறது. அதை மையமாக கொண்ட கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இப்படமானது எப்போது வெளியாகும் என் அப்படக்குழு இன்னும் குறிப்பிடவில்லை. ஆனால் இப்படத்தை வரும் 2026ம் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு படக்குழு வெளியிட பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
Janhvi Kapoor: எனது ஃபேஸ் க்ளோவிங்-காக இதை மறக்காமல் செய்வேன்.. ஜான்வி கபூர் சொன்ன பியூட்டி சீக்ரட்!
Ashwath Marimuthu: STR51-ல் சந்தானம் இருக்காரு.. படத்தின் மைய கருத்து இதுதான் – அஷ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட்!
Vadam: விமலின் கிராமத்து கதைக்களம் பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? வடம் திரைப்படத்தில் விமர்சனங்கள் இதோ!
Texla: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா படத்தில் நடிக்கும் ஜெய்.. பூஜைகளுடன் தொடங்கிய ஷூட்டிங்!
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
Sai Abhayankkar: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி