#Love சீரிஸிக்காக ஒன்றிணைந்த அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி!
Love Web Series: நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இணைந்து ஒரு காதல் கதையில் நடிக்க உள்ளனர். இந்த இணையதள தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி
தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் காதலில் சொதப்புவது எப்படி. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் (Actor Siddharth) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அமலா பால் (Actress Amala Paul) நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ந்து இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 ஆகியப் படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களை இயக்கியது மட்டும் இன்றி தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரிக்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாரி 2 படத்திற்கு பிறகு படங்களை இயக்காமல் இருந்த இயக்குநர் பாலாஜி மோகன் தற்போது இணையதள தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இது நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெப் சீரிஸிற்காக ஒன்றிணைந்த அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி:
இந்த நிலையில் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் சீரிஸில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாகாவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த இணையதள தொடர் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான அப்டேட்டை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலாஜி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
My Next 🙂 #Love – A Netflix Original Tamil series.
Produced by @soundaryaarajni @May6Ent
Starring – @iam_arjundas & #AishwaryaLekshmi
Coming soon 🙂 pic.twitter.com/Cq3Xx7RlVv
— Balaji Mohan (@directormbalaji) October 13, 2025