AR Murugadoss:விஜய்யுடன் ஒரு படம்.. மிஸ்ஸான வாய்ப்பு – இயக்குநர் AR முருகதாஸ்!
AR Murugadoss About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் தளபதி விஜய்க்கு, தான் சொன்ன புதிய படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்ததாகவும், அது நடக்காமல்போன காரணம் குறித்துப் பேசியுள்ளார்.

விஜய் மற்றும் முருகதாஸ்
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இவரின் இயக்கத்தில் தமிழில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகவுள்ள படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில், முற்றிலும் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்திருக்கிறாராம். இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை ஒட்டி, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், தளபதி விஜய்யிடம் இறுதியாகக் கூறிய படத்தின் கதை குறித்தும், அது நடக்காமல் போனது குறித்தும் பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
மதராஸி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :
Big week.
Important week.
It begins 🚀#Madharaasi – in theatres from September 5 💥 pic.twitter.com/dUOeM9gia8— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 18, 2025
இதையும் படிங்க : தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!
தளபதி விஜய்யிடம் சொன்ன படத்தின் கதை குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், தளபதி விஜய்யிடம் இறுதியாகக் கூறிய படத்தின் கதை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், ” நான் இதுவரைக்கும் விஜய் சாரிடம் 3 படத்தின் கதையை சொல்லியிருக்கிறேன். அந்த 3ம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை அடுத்து 4வதும் ஒரு படத்திற்கான ஸ்கிரிப்டை கூறியிருந்தேன், அதுவும் அவருக்குப் பிடித்திருந்தது. அந்த படமானது வேறு சில காரணங்களால் நடக்காமல் போனது தவிர அவருக்கு அந்த படத்தின் கதை மிகவும் பிடித்துத்தான் இருந்தது. இதுவரைக்கும் நான் சொன்ன ஹீரோக்களிடம் இருந்து படம் வேண்டாம் என பதில் வந்ததில்லை.
இதையும் படிங்க : அல்லு அர்ஜுன் – அட்லீயின் படத்தில் இணையும் தமிழ் பிரபலங்கள்.. கேமியோ ரோலில் அந்த நடிகரா?
பீஸ்ட் படத்திற்கு முன் விஜய் சார் நடிக்கவேண்டியது என்னுடைய படம்தான். அந்த நேரம் கொரோனா டைம், அப்போது சினிமா பிஸினஸாக மாறியது. அந்த தேதியில் இந்த படம் எப்படி வரும் என யோசித்திருக்கலாம். அல்லது இப்போதுவரும் இளம் இயக்குநரை வைத்து ஒரு படம் பண்ணலாமே என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் விஜய் படம் நடக்காமல் போனதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறோம் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபனாக பேசியுள்ளார். இது தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.