மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் அந்த பாலிவுட் நடிகருக்குதான் முதலில் சொன்னேன் – ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மதராஸி படத்தின் வெளியீட்டு பணியில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் பல யூடியூப் சேனல்களுக்கு அளிக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் அந்த பாலிவுட் நடிகருக்குதான் முதலில் சொன்னேன் - ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

Updated On: 

19 Aug 2025 11:23 AM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) தற்போது மதராஸி படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளில் மிகவும் பிசியாக இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நாயனகானக் நடித்து உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மினி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், பிரேம் குமார், சபீர் கல்லரக்கல், சஞ்சய் மற்றும் சாச்சனா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக படத்தில் இருந்து சலம்பல என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கானிடம் மதராஸி கதையை சொன்ன முருகதாஸ்:

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் மதராஸி படத்தின் சிவகார்த்திகேயனின் கேரக்டரில் நடிகர் ஷாருக்கானை நடிக்க வைப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், 7-8 வருடங்களுக்கு முன்பு நான் ஷாருக்கானிடம் மதராஸி படத்தின் ப்ளாட் என்ன என்பது குறித்து சொன்னேன். ஷாருக்கானுக்கும் அது பிடித்திருந்தது, நாம் படத்தை செய்யலாம் என்றார். அதனைத் தொடர்ந்து 2 வாரங்களுக்குப் பிறகு நான் ஷாருக்கானுக்கு ஒரு குருஞ்செய்தி அனுப்பினேன். அதற்கு தாமதமாக தாமதமாக ரிப்ளை வந்தது. இது நடக்காது என எனக்கு புரிந்தது. அதனால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். அதனைத் தொடர்ந்து இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சிவகார்த்தியேன் சரியாக இருப்பார் என்று தோன்றியது அதனால் அவரை அனுகினேன் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… Aamir Khan : கூலியில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆமிர் கான்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னது என்ன?

Also Read… ஓஹோ எந்தன் பேபி படம் டிரண்டிங்கில் நம்பர் 1.. விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!