வானில் ஒரு திடீர் மாற்றம்… வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களைப் போலவே – வெளியானது சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லர்!

Sattendru Maarudhu Vaanilai Movie Trailer | நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை படம். இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அந்த ட்யெலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வானில் ஒரு திடீர் மாற்றம்... வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களைப் போலவே - வெளியானது சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லர்!

சட்டென்று மாறுது வானிலை

Published: 

01 May 2026 18:32 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் பகவதி. இந்தப் படத்தில் நடிகர் விஜயின் தம்பியாக அறிமுகம் ஆனார் நடிகர் ஜெய். இந்தப் படத்தில் ஜெய்யின் கதாப்பாத்திரம் கொலைசெய்யப்படுகின்றது. அவரது கதாப்பாத்திரம் பெரிய அளவில் படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் அவரது கதாப்பாத்திரத்தை சுற்றியே பகவதி படம் செல்லும். இதன் காரணமாக மக்களின் மனதில் மிகவும் அதிகமாக பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இவரது நடிப்பில் வெளியான பலப் படங்கள் மக்களிடையே பிரபலமானது. மேலும் இளைஞர்களை கவரும் வகையில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் தொடந்து கதைகளை மையமாக வைத்து உருவாகி வருகின்றது. அதன்படி நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை படம். இந்தப் படத்தை இயக்குநர் பாபு விஜய் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், ஆதியா கதிர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

சட்டென்று மாறுது வானிலை பட ட்ரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்:

மேலும் இந்த சட்டென்று மாறுது வானிலை படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வானில் ஒரு திடீர் மாற்றம்… வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களைப் போலவே என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது ஒரு பக்கா கமெர்ஷியல் படம் போல காமெடி, ட்ராமா மற்றும் ஆக்‌ஷன் த்ரில்லர் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Trisha Krishnan: பிரீத்தியாக திரிஷா கிருஷ்ணன்.. கேரக்டர் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட கருப்பு படக்குழு!

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டாப் 5 டிஆர்பி ரேட்டிங்.. 5ல் ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்… எந்த தொடர் தெரியுமா?

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..