21 வயசுல என்ன நம்பி கத்தி படத்தை கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்  – அனிருத்!

Music Director Aniruth: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றுள்ளது. இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் நிகச்சியில் பேசியது அனிருத் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

21 வயசுல என்ன நம்பி கத்தி படத்தை கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்  - அனிருத்!

ஏ.ஆர்.முருகதாஸ்  - அனிருத்

Published: 

24 Aug 2025 21:37 PM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ருக்மிணி நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா எப்போது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று 24-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியானது. இந்த நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு படக்குழுவினர் அனைவரும் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து நெகிழ்ந்து பேசிய அனிருத்:

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், மதராஸி படத்தின் மூலம் நான் சிவகார்த்திகேயன் உடன் 8-வது முறை கூட்டணி வைத்துள்ளேன். அதே போல ஏ.ஆர்.முருகதாஸ் உடன் 3-வது முறை இந்தப் படத்தின் மூலம் கூட்ட்டணி வைத்துள்ளேன்.

அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என்னுடைய 21-வது வயதில் என்னை நம்பி கத்தி என்ற பெரிய படத்தைக் கொடுத்தார். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக சினிமாவில் இருந்தது என்று தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த பின்னணி பாடலை இசையமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read… ஏன் கல்யாணி… இணையத்தில் கவனம் பெறும் கூலி நடிகர் கண்ணா ரவி போஸ்ட்!

இணையத்தில் கவனம் பெறும் அனிருத் பேச்சு:

Also Read… கூலி பிடிஎஸ் புகைப்படங்களுடன் நடிகர் சௌபின் சொன்ன விசயம் – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்