STR51: சிலம்பரசன்- அஸ்வத் மாரிமுத்துவின் ‘STR51’ படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஷூட்டிங் எப்போது தெரியுமா?

STR51 Movie Update: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் இவர் STR51 என்ற படத்திலும் இணைகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

STR51: சிலம்பரசன்- அஸ்வத் மாரிமுத்துவின் STR51 படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சிலம்பரசனின் STR51 படம்

Published: 

30 Dec 2025 17:57 PM

 IST

கடந்த 2020ம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே (oh May Kadavule) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuththu) . இவரின் இயக்கத்தில் வெளியான இந்த முதல் படத்தில் அசோக் செல்வன் (Ashok Selvan) மற்றும் ரித்திகா சிங் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் விஜய் சேதுபதி இதில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்தக்க இவரின் இயக்கத்தில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலகெமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இந்த் படத்தின் வெற்றியை அடுத்ததாக தற்போது நடிகர் சிலம்பரசனுடன் (Silambarasan) கைகோர்த்துள்ளார்.

இந்த படமானது தற்காலிகமாக STR51 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: டிக்கெட் டூ ஃபினாலே 2 டாஸ்கில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் பார்வதி… வைரலாகும் பதிவு

STR51 திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

STR51 படத்தின் ஷூட்டிங் எப்போது :

இந்த STR51 திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, ஏ.ஜி.எஸ். என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மற்ற படங்களை ஒப்பிடும்போது இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் சிலம்பரசன் நடிக்கிறாராம். இவரின் சினிமா ஆரம்பகாலகட்டத்தில் நடித்த மன்மதன் படத்தைப் போல இப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் தற்போது சிலம்பரசன் மட்டுமே நடிப்பதாக உறுதியாகியுள்ள நிலையில், கதாநாயகி யார் என இன்னும் உறுதியாகவில்லை.

இதையும் படிங்க: ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? வைரலாகும் தகவல்

இந்த படத்தில் கயாடு லோஹர் அல்லது ருக்மிணி வசந்த் இணைந்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் புது படத்தில் இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு