இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்

Anbe Diana Movie Official Title Teaser | தமிழ் சினிமாவில் ஜமா படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் பாரி இளவழகன். இவர் தற்போது எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்

அன்பே டயானா

Published: 

01 Mar 2026 17:56 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜமா. இந்தப் படத்தை இயக்குநர் பாரி இளவழகன் எழுதி இயக்கி இருந்தார். இது அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தெருக்கூத்து கலையில் பெண் வேடமிட்டு நடிக்கும் ஒரு ஆணின் வாழ்க்கையை சுற்றியும் அழிந்துவரும் கிராமியைக் கதைகளை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பாரி இளவழகன் எழுதி, இயக்கி மற்றும் நாயகனாக நடித்துள்ள படம் அன்பே டயானா.

இந்தப் படத்தில் நடிகர்கள் பாரி இளவழகன் உடன் இணைந்து நடிகர்கள் ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன் கே.ஏ, கோபி அரவிந்த் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான நியோ கேஸில் கிரியேஷன்ஸுடன் இணைந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்து உள்ளது.

இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா டீசர்:

இந்தப் படம் சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை சுற்றி நடப்பது போல டைட்டில் டீசரில் காட்டப்படுகின்றது. மேலும் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலிக்கிறார். அந்த காதலில் பல சிக்கள்கள் ஏற்படுகிறது. அவற்றை இவர்கள் எப்படி சமாளித்து ஒன்று சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரவி மோகனின் ஜீனி படம் இந்த ஆண்டில் நிச்சயமாக வெளியாகும் – தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வீக்கெண்டில் த்ரில்லர் படம் பார்க்கணும்னு நினைக்கிறீங்க? இந்த பாதிராத்திரி படத்தை மலையாள சினிமாவில் மிஸ் செய்யாதீர்கள்

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்