வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
Vaa Vaathiyaar Movie OTT Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக திரையாரங்களில் வெளியான வா வாத்தியார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

வா வாத்தியார்
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். இந்தப் படம் முன்னதாக டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கு இருந்த கடன் பிரச்சனையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தொடர்ந்து படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
அதன்படி கடந்த 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து இருந்தார். படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் ஆனால் இந்த வா வாத்தியார் படம் 15 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வா வாத்தியார் படம் வருகின்ற 28-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
a new superhero in a new avatar is coming to meet you 😎🔥#VaaVaathiyaarOnPrime, New Movie, Jan 28@Karthi_Offl @IamKrithiShetty #NalanKumarasamy @Music_Santhosh@VaaVaathiyaar @StudioGreen2 @gnanavelraja007 #Rajkiran #Sathyaraj #Anandaraj @GMSundar_ #Karunakaran… pic.twitter.com/jaweyUGM9c
— prime video IN (@PrimeVideoIN) January 27, 2026
Also Read… மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி