Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை பெற்ற பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?

Jailer 2 Movie OTT Rights: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரின் 172வது படமாக தயாராகியிருப்பதுதான் ஜெயிலர் 2. இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை பெற்ற பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?

ஜெயிலர் 2

Updated On: 

18 Apr 2026 15:03 PM

 IST

கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Suparstar Rajinikanth) லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் பல்வேறு உச்ச நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தினை ஜெயிலர் 1 படத்தை எடுத்திருந்த இயக்குநர் நெல்சன் தீலிப்குமார்தான் (Nelson Dilipkumar) இப்படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தனக்கான ஷூட்டிங் காட்சிகளை முழுவதுமாக முடித்துள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதில் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற சினிமாவில் பிரபலமான நடிகர்கள் இதில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைப்பாளராக இசையமைத்துவருகிறார்.

மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் லீக்காகியிருந்தது. அதை முன்னிட்டு படக்குழு எச்சரித்திருந்தது. அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒப்பந்தத்தை பிரபல நிறுவனம், பல கோடிகளை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து – பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு

ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை மற்றும் விற்கப்பட்ட தொகை:

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் 1 படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி, கிட்டத்தட்ட ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து ஜெயிலர் 2 படமானது உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படமும் கிட்டத்தட்ட ரூ 350 கோடி செலவில் தயாராகிவருகிறது. இப்படத்தின் இறுதிக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் ஓடிடி ஒப்பந்தம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எனது முந்தையப் படங்களை விட 10 மடங்கு கருப்பு சிறப்பாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி

அதன்படி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை கிட்டத்தட்ட ரூ 160 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாம். தமிழ் சினிமாவிலே அதிகமான தொகைக்கு ஓடிடியில் விற்கப்பட்ட முதல் படம் ஜெயிலர் 2 படம் என கூறப்படுகிறது. ஜன நாயகன் படமே கிட்டத்தட்ட ரூ 120 கோடிகளுக்கு விரிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் 2 படமானது அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமம் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்:

இந்த ஜெயிலர் 2 படத்தை படக்குழு வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுவருகிறது. அந்த வகையில் இன்னும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..