Amaran: 70வது ஃபிலிம் ஃபேர் அவார்ட்ஸ்.. 8 விருதுகளை வென்ற ‘அமரன் திரைப்படம்’ – என்னென்ன தெரியுமா?

Amaran Sweeps 70th Filmfare Awards: கடந்த 2024ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் வெளியான படம் அமரன். இப்படமானது பல்வேறு விருதுகளை வாங்கிவருகிறது. அந்த வகையில் 70வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் 8 கேட்டகிரியில் விருதுகளை பெற்றுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Amaran: 70வது ஃபிலிம் ஃபேர் அவார்ட்ஸ்.. 8 விருதுகளை வென்ற அமரன் திரைப்படம் - என்னென்ன தெரியுமா?

அமரன் திரைப்படம்

Updated On: 

22 Feb 2026 16:29 PM

 IST

உலகநாயகன் கமல்ஹாசனின் (Kamal Hasaan) தயாரிப்பில் தொடர்ந்து புது படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரித்திருந்த படம்தான் அமரன். இந்த படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மற்றும் ராணுவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), முகுந்த் வரதராஜன் வேடத்திலும், அவரின் காதல் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வேடத்தில் நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi) நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2024ம் ஆண்டில் அக்டோபர் 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியடைந்திருந்தது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இப்படமானது பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மையில் கேரளாவில் நடைபெற்ற 70வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் , அமரன் படமானது மொத்தம் 8 விருதுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சீரியல் ரசிகர்களே தயாரா? விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பழைய சீரியல்கள்.. என்னென்ன தெரியுமா?

70வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் 8 விருதுகளை குவித்த அமரன் திரைப்படம் :

சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற இந்த ஃபிலிம் ஃபேர் விருதுவழங்கும் விழாவில், அமரன் படக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். அந்த விருதுவழங்கும் விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருது அமரன் படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கு, சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு, சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும், சிறந்த ஆல்பமிற்கான விருது ஜி.வி. பிரகாஷிற்கு, சிறந்த சினிமோட்டோகிராஃபர் விருது சாய்க்கும் கிடைத்திருந்தது.

இதையும் படிங்க: சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்

மேலும் சிறந்த ஆண் பாடகருக்கான விருது (ஹே மின்னலே பாடலுக்கு) ஹரிச்சரனுக்கும் மற்றும் சிறந்த பெண் பாடகிக்கான விருது (ஹே மின்னலே பாடலுக்கு) சுவேதா மோகனுக்கு கிடைத்திருந்தது. ஆக மொத்தத்தில் அமரன் திரைப்படமானது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில், மொத்தம் 8 விருதுகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலிம் ஃபேர் விருது குறித்து அமரன் படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த 70வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் அமரன் படம் மட்டுமே, தொடர்ந்து ஒரே படத்திற்கான 8 விருதுகளை பெற்றுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!