புஷ்பா 2 படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது வென்ற அல்லு அர்ஜுன் – வைரலாகும் எக்ஸ் பதிவு

Allu Arjun X Post About Filmfare Award: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஃபிலிம் ஃபேர் விருதை வென்ற அல்லு அர்ஜுன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புஷ்பா 2 படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது வென்ற அல்லு அர்ஜுன் - வைரலாகும் எக்ஸ் பதிவு

அல்லு அர்ஜுன்

Published: 

22 Feb 2026 16:24 PM

 IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் குறிப்பாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஜப்பானின் புஷ்பா 2 படம் ரிலீஸ் செய்ப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காக படக்குழுவினர் ஜப்பான் சென்றது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் 70-வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழா நடைப்பெற்றது. இதில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் பல படங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் நடித்து உலக அளவில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற புஷ்பா 2 படத்திற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த அற்புதமான கௌரவித்திற்கு நன்றி:

இந்த அற்புதமான கௌரவத்திற்கு நன்றி, பிலிம்பேர். இவ்வளவு தனித்துவமான முறையில் நான் நேசிக்கப்படும் ஒரு நாட்டில் இதைப் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அனைவரின் ஆசீர்வாதங்களால் நான் பணிவுடன் இருக்கிறேன், மேலும் இந்த விருதை எனது ரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… 13 ஆண்டுகளுக்குப் பிறகு KHxRK படத்தில் ஒளிப்பதிவாளராக களமிறங்கும் ராஜீவ் மேனன்!

நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… KH X RK படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் என்ன? – வைரலாகும் தகவல்!

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!