Ajith Kumar : அஜித்தா இது..! நியூ லுக்கில் அஜித் குமார் இருக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

Ajith Kumars New Look :தமிழ் சினிமாவில் பிரபல உச்ச நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகியிருக்கிறது. சமீபத்தில் இணையத்தில் அஜித் குமாரின் நியூ லுக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்க்கலாம்.

Ajith Kumar : அஜித்தா இது..! நியூ லுக்கில் அஜித் குமார் இருக்கும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

நடிகர் அஜித் குமார்

Published: 

24 Jun 2025 15:19 PM

 IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படத்தில் அஜித் குமார் பல வருடங்களுக்குப் பின் மீண்டும் அதிரடி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan)  நடித்திருந்தார். சொல்லப்போனால் கடந்த 2024ம் ஆண்டு அஜித்தின் எந்த படமும் வெளியாகாத நிலையில், இந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளியாகியிருந்தது. இதில் விடாமுயற்சி (Vidaamuyarchi) படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதன் பிறகு வெளியான இந்த குட் பேட் அக்லி படமானது சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது என்றே கூறலாம். இந்த இரு படங்களின் படப்பிடிப்பையும் நடிகர் அஜித் குமார் கடந்த 2024ம் ஆண்டு, டிசம்பர் மாதத்திலே நிறைவு செய்திருந்தார்.

அதை தொடர்ந்து கார் ரேஸ் பந்தயத்தில் நுழைந்தார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமாரின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் குமார், மொட்டைத் தலையுடன் வேதாளம் பட லுக்கில் இருக்கும்  புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் புகைப்படங்கள் குறித்த பதிவு :

கார் ரேஸில் சாதனை :

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு, கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்தியாவின் சார்பாகத் தனது அணியுடன் துபாயில் நடைபெற ஜிடி-24 கார் ரேசில் கலந்துகொண்டார். இந்த ரேசில் 3வது இடத்தை பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்.

மேலும் இத்தாலி மற்றும் ஐரோப்பா போன்ற இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு 2 மற்றும் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார். மேலும் சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்திலும் தனது அணியுடன் கலந்துகொண்டார். திரைப்படங்களைத் தொடர்ந்து அஜித் குமார் கார் ரேஸ் பந்தையத்திலும் தனது ஆர்வத்தைக் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் புதிய பட அப்டேட் :

அஜித் குமார் கார் ரேஸை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். இவரின் 64வது திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அஜித் குமாரும் பேட்டி ஒன்றில், தனது 64வது படத்தை, எனது லக்கி இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் இணையவுள்ளேன் என்றும், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.