இப்போ என் என்ட்ரி… ஹீரோ என்ட்ரி… மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது
Mankatha Re-release Trailer | நடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மங்காத்தா. இந்தப் படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

மங்காத்தா
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் என்ற கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி புதிதாக படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது மீண்டும் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது உள்ள இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற மங்காத்தா படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா க்ருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன், ஆண்ட்ரியா, லட்சுமி ராய், அஞ்சலி, வைபவ், அஸ்வின், பிரேம்ஜி அமரன், மஹத் ராகவேந்திரா, ஜெயபிரகாஷ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் வெளியானது:
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ள நடிகர் அஜித் குமார் சினிமா வாழ்க்கையில் கெரியர் பெஸ்ட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு முன்னதாக வெளியிட்டு இருந்தது. அதன்படி படம் வருகின்ற 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மறுஆய்வு குழுவினர் கேள்விக்கு சுதா கொங்கரா அளித்த பதில் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
மங்காத்தா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Mankatha madness returns!😎#Mankatha Re-release Trailer is out now!
▶️ https://t.co/tuLqtXaRzd#Mankatha in theatres from January 23 ♠️#AjithKumar @vp_offl @thisisysr @akarjunofficial @trishtrashers @actor_vaibhav @Premgiamaren @AshwinKakumanu @MahatOfficial… pic.twitter.com/JEbNKR0kb5
— Sun Pictures (@sunpictures) January 15, 2026
Also Read… அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு