Ajith Kumar: போட்டி இருக்கு.. நாங்க என்னைக்கு எதிரியாக இருந்ததில்லை – விஜய் குறித்து அஜித் பகிர்ந்த விஷயம்!

Ajith And Vijay Friendship : கோலிவுட் ஸ்டாராகவும், கார் ரேஸராகவும் கலக்கிவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்களும் தயாராகிவருகிறது. இந்நிலையில், முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அஜித், தளபதி விஜய்யின் நட்பு குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Ajith Kumar: போட்டி இருக்கு.. நாங்க என்னைக்கு எதிரியாக இருந்ததில்லை - விஜய் குறித்து அஜித் பகிர்ந்த விஷயம்!

அஜித் மற்றும் விஜய்

Published: 

15 Sep 2025 06:30 AM

 IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) என்றாலே நமக்கு நினைவு வருவது கார் ரேஸ் மற்றும் அசாதாரமான நடிப்புதான். தமிழ் சினிமாவில் நடிகராக நுழைத்த இவர், ஆரம்பத்தில் பைக் ரேஸராகவும் இருந்திருக்கிறார். இவர் தமிழில் 1993ம் ஆண்டு வெளியான அமராவதி (Amaravathi) என்ற படத்தில் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து ஆசை (Aasai), வான்மதி, கல்லூரி வாசல் மாற்றம் காதல் கோட்டை என பல படங்களில் தொடர்ந்து நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மிகவும் பிரபலமாகியிருந்தார் அஜித் குமார். மேலும் 2000 ஆண்டு ஆரம்பம் முதல், தற்போது வரை அஜித் மற்றும் விஜய் (Vijay) ரசிகர்கள் மத்தியில் படங்கள் தொடர்பான போட்டிகள் நிலவிவருகிறது.

இந்நிலையில், மேலும் அஜித் மற்றும் விஜய் இருவரும் எதிரிகளா என கேள்விகளும் எழுந்துவந்து நிலையில், முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித் குமார், தளபதி விஜய் உடனான நட்பு பற்றி பேசியுள்ளனர். தளபதி விஜய் பற்றி அஜித் குமார் பேசிய விஷயம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்

தளபதி விஜயின் நட்பு குறித்து அஜித் குமார் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய அஜித் குமார், “நானும் விஜயும், என்றும் எதிரியாக இருந்ததில்லை. நடிகர்களுக்குள் நிச்சயமாக போட்டி இருக்கிறது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் நிச்சயமாக போட்டிகள் இருக்கும். அந்த போட்டி அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பாதிக்காமல் இருந்தால், அது ஆரோக்கியமான போட்டிதான்.

இதையும் படிங்க : 1000 கோடி வசூல் செய்த படமும் இல்லை அதனால் பதற்றம் இல்லை – சமந்தா அதிரடி பேச்சு!

எப்படி உங்களுக்குள் போட்டி இருக்கிறதோ, அதே போல எங்களுக்கும் போட்டி இருக்கிறது. மேலும் தனிப்பட்ட காரணங்களால் எங்கள் இருவருக்குள்ளும் எந்த போட்டிகளும் இல்லை, அதனால் நாங்கள் நிஜமாக எதிரிகள் கிடையாது” என்று நடிகர் அஜித் குமார் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த தகவலானது , அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

அஜித் குறித்து சுரேஷ் சந்திரா இறுதியாக வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அஜித் குமார் மற்றும் விஜய் இணைந்து நடித்த படம் :

அஜித் குமார் மற்றும் விஜய் இணைந்து 1 படத்தில் நடித்திருக்கின்றனர். இவருவரும் கடந்த 1995ம் ஆண்டு வெளியான, ராஜாவின் பார்வையில் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் இன்றளவிலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.