Ajith Kumar: எனக்கு ஆதரவு கொடுக்க திரண்ட ரசிகர்கள்.. ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்துவேன் – அஜித் குமார் பேச்சு!
Ajith Kumar About His Fans: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் கார் ரேஸராகவும் கலக்கிவருபவர் அஜித் குமார். இவர் சமீபத்தில் துபாய் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், அவரின் அணியின் கார் பாதிலே தீப்பிடித்துவிட்டது. இந்நிலையில் அவர்கள் இப்போட்டியிலிருந்து விலகிய நிலையில், நேர்காணல் ஒன்றில் ரசிகர்கள் குறித்து அஜித் பகிர்ந்த விஷயம் வைரலாகிவருகிறது.

அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், இறுதியாக கடந்த 2025ல் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என இரு படங்கள் வெளியாகியிருந்தது. இதில் குட் பேட் அக்லி படமானது எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக முழுவதுமாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் அஜித் குமார் பிசியாக இருந்துவருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 4 நாடுகளில் நடந்த சர்வதேச கார் நிகழ்ச்சியில் தனது அணியினருடன் அஜித் குமார் கலந்துகொண்டிருந்தனர். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்றுவந்த 24H கார் ரேஸ் (Dubai 24H Car Race) போட்டியிலும் தனது அணியினருடன் அஜித் குமார் கலந்துகொண்டிருந்தார்.
இந்த போட்டியானது கடந்த 2026 ஜனவரி 17ம் தேதியில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போதே, அஜித் குமார் அணியின் கார் ரேஸிங் ட்ராக்கில் தீப்பிடித்து எதிரிந்தது. இதில் எந்தவித உயிர்சேதமும் இன்றி, போட்டியாளர் உயிர் தப்பியிருந்தார். இதனால் அஜித் குமாரின் அணி இந்த போட்டியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் பேசிய அஜித் குமார், தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளர்.
இதையும் படிங்க: ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் தனுஷின் கர பட வீடியோ… வைரலாகும் போஸ்ட்
ரசிகர்களின் ஆதரவு குறித்து அஜித் குமார் வெளிப்படையாக பேசிய விஷயம் :
அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஜித் குமார், “எனக்காக ஆதரவு கொடுக்க திரண்ட ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையும், எனது அணியினர் போட்டியில் வெல்வதையும் பார்க்க முடியாதது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன், நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணியானது நிச்சயமாக ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என அவர் அதில் ஓபனாக பேசியுள்ளார்.
ரசிகர்கள் குறித்து அஜித் குமார் பேசிய எக்ஸ் பதிவு :
Here is the interview of #AjithKumar sir which he talked about his fans.
“Extremely grateful to them, I am feeling little sorry for them and they couldn’t see me driving and to see me finish on the podium. But I promise good days around the corner, we will make them proud” pic.twitter.com/8KmCxvVU2O
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) January 17, 2026
நடிகர் அஜித் குமார் கிட்டத்தட்ட 1 ஆண்டில் கிட்டத்தட்ட 4க்கும் மேற்பட்ட கார் ரேஸில் தனது அணியுடன் கலந்துகொண்டிருந்தனர். இவர் துபாய் ரேஸிற்கு முன் இறுதியாக மலேசியாவில் நடந்த 24H கார் ரேஸில் கலந்துகொண்டார். இதில் அஜித்தின் அணி 4வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் எனக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதற்காக ஸ்பான்சர்களை தேடவில்லை – வைரலாகும் நடிகர் அஜித் குமாரின் பேச்சு!
இதையடுத்து துபாயில் நடந்த கார் ரேஸின்போது அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்க, அனிருத், சிபி சத்யராஜ், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அஜித் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.