Ajith Kumar: அஜித்குமாருக்கு இப்படி ஒரு பிரச்னையா? – அவரே பகிர்ந்த தகவல்!

Ajith Kumar Reveals His Problems: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் விரைவில் AK64 படமானது உருவாகவாகவுள்ளது. இந்நிலையில், தனது உடலில் இருக்கும் பிரச்சனை தொடர்பாக அஜித் குமார் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்ன என்பது பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.

Ajith Kumar: அஜித்குமாருக்கு இப்படி ஒரு பிரச்னையா? - அவரே பகிர்ந்த தகவல்!

அஜித் குமார்

Published: 

03 Oct 2025 12:10 PM

 IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார்  முழுமையாக கார் ரேஸ் (Car Race) போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை உலகநாடுகளில் நடந்த பல போட்டிகளில் தனது அணியினருடன் கலந்து கொண்டிருந்தனர். இதில் 4 போட்டிகளில் இந்தியாவின் சார்பாக வெற்றி கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஸ்பெயினில் (Spain) நடைபெற்றே 24H கார் ரேஸில் தனது அணியினருடன் கலந்துகொண்டார். இதில் 3வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார். அவருக்கு தூக்கத்தில் இருக்கும் பிரச்சனையை பற்றி ஓபனாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: தென்னாடு தேசத்துல வாழும் கூட்டம்… பைசன் பட தென்னாடு என்ற பாடல் வெளியானது!

தனக்கு இருக்கும் பிரச்னை குறித்து அஜித் குமார் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் அஜித் குமார், சினிமாத் துறையை பற்றியும் கார் ரேஸ் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், தனக்கு தூக்கமே வராது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்… மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

தூக்க பிரச்சனை காரணமாக, ஒரு நாளைக்கு சுமார் 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாகாகவும், அதற்கு மேல் தூங்க முடிவயவில்லை என்றும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமாரின் புதிய அணியின் தொடர்பாக வெளியான பதிவு:

அஜித் குமாரின் AK64 திரைப்படம் :

அஜித் குமரன் AK64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் ஹார்பர் மற்றும் கடத்தல் தொடர்பான கதைக் களத்தில் இந்த படமானது உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த AK64 படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.