Aishwarya Rajesh: உடலை பார்க்கவேண்டும் என சொன்னார்.. போட்டோ ஷூட்டில் நடந்த கசப்பான சம்பவம் – ஐஸ்வர்யா ராஜேஷ்!
Aishwarya Rajesh About Shocking Photo Shoot Ordeal: தென்னிந்திய சினிமாவில் பேமஸ் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கதாநாயகியாக கலக்கிவருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், போட்டோ ஷூட்டில் நடந்த அசௌகரியமான சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் குறிப்பாக சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தர்மதுரை (Dharma Durai), காக்கா முட்டை, ரம்மி, கனா போன்ற பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. தமிழில் இவர் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் தற்போது “ஓ சுகுமாரி” (Oh.. Sukumari ) என்ற திரைப்படமானது தயாராகிவருகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்கிருக்கிறார். இந்த படத்தில் லீட் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படமானது முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகவுள்ள நிலையில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் முன்பு ஒரு போட்டோ ஷூட்போது நடந்த கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களிடையே வைரலாகும் பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டைட்டில் டீசர்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:
போட்டோஷூட்டில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்:
சமீபத்தில் தெலுங்கு பாட் காஸ்ட் நேர்காணலில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதில் ” நான் இளம் வயதில் இருக்கும்போது, நானும் எனது சகோதரனுடன் ஒரு போட்டோ ஷூட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அந்த போட்டோகிராபர் எனது சகோதரனை வெளியே அமர சொல்லிவிட்டார். பின் என்னை அறைக்கு அழைத்து சென்று, உன் உடலை பார்க்கவேண்டும் என, பிகினி ஆடையை அணிந்துவர சொன்னார். அந்த சமயத்தில் திரைத்துறை குறித்து எனக்கு பெரிதாக புரிதல் ஒன்றுமே இல்லை.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
அப்படித்தான் ஆரம்பத்தில் வாழ்க்கை சென்றது. நானும் அதை அணிவதற்கு ஓரளவு சம்மதித்துவிட்டேன். ஆனாலும் அதை செய்யவில்லை. அவர் கூடுதலாக 2 முறை சொல்லியிருந்தால் செய்திருப்பேன். சூழ்நிலையிலிருந்து வெளியேற, என் சகோதரனிடம் அனுமதி பெற வேண்டும் என்று புகைப்படக் கலைஞரிடம் கூறி, அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்தேன். எத்தனை பெண்களை அந்த அந்த புகைப்படம் எடுப்பவர் இப்படி செய்தார் என தெரியவில்லை. அப்போது எனது சகோதரனிடம் சொல்வதற்கும் எனக்கு தைரியமில்லை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.