‘AK64’ படம் பற்றி சிறப்பான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

AK64 Movie Update: பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில், அஜித்தின் புதிய படத்தையும் இவர்தான் இயக்கவுள்ளார். இந்த படமானது AK64 என அழைக்கப்படும் நிலையில், புதிய அப்டேட்டை ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

AK64 படம் பற்றி சிறப்பான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

Published: 

23 Sep 2025 21:00 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகி இருந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவரின் இயக்கத்தில் இறுதியாக “குட் பேட் அக்லி” (Good Bad Ugly) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 ஏப்ரல் 10 ஆம் தேதியில், உலகமெங்கும் வெளியானது. அஜித் குமாரின் அசத்தல் நடிப்பு மற்றும் அதிரடி ஆக்ஷ்ன் என இப்படமுழுவதும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து, அஜித்தின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்தான் இயக்கவுள்ளார். இது குறித்து உறுதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் முன்பே கூறியிருந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படும் நிலையில், தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், AK64 படம் பற்றி சிறப்பான அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அது என்ன என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு வைரலாகும் போட்டோஸ்

AK64 படம் பற்றி அப்டேட் கூறிய ஆதிக் ரவிச்சந்திரன்

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்களை ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்திருந்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், அஜித் குமார் சாருடன் இறுதியாக, குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருந்தேன், இந்த படத்தைத் தொடர்ந்து எனது புதிய படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அப்டேட் வெளியாகும்” என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அந்த சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவலானது, அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அஜித் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த எக்ஸ் பதிவு :

அஜித் குமாரின் AK64 திரைப்படத்தின் நடிகர்கள்

அஜித் குமாரின் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்வாசிகாவும் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த AK64 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : வகைவகையான சொகுசு கார்கள்.. துல்கர் – பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை!

இவர்களை தொடர்ந்து, அஜித்தின் 64வது படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளாராம் . மேலும் நடிகை அஞ்சலியும் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், வரும் அக்டோபர் இறுதிக்குள் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.