கல்யாணமா? ஹனிமூனையும் பிளான் பண்ணுங்க – திருமண சர்ச்சைக்கு திரிஷா பதில்
Trisha Marriage Rumour : திரிஷாவுக்கு திருமணம் எனவும் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் எனவும் தகவல் பரவியது. கிட்டத்தட்ட அனைத்து செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் திரிஷா அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

திரிஷா
கடந்த 2000 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா (Trisha), மாடலாக விளம்பரங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு ஜோடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில காட்சிகள் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் லேசா லேசா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அப்போது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த ஷாம், மாதவன் , ஹாரிஸ் ஜெயராஜ் இசை என பிரம்மாண்டமான அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன் அவரது இரண்டாவது படமான சூர்யாவின் மௌனம் பேசியதே வெளியானது. அன்றில் இருந்து தற்போது வரை தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயினாக தொடர்ந்து வருகிறார் திரிஷா.
கல்யாண வதந்திக்கு திரிஷா பதிலடி
இந்த நிலையில் திரிஷாவுக்கு திருமணம் எனவும் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார் எனவும் தகவல் பரவியது. கிட்டத்தட்ட அனைத்து செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் திரிஷா அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அதில், சிலர் என் கல்யாணத்தை திட்டமிடுவது பிடித்திருக்கிறது. அவர்கள் என் ஹனிமூனையும் திட்டமிடுவதைப் பார்க்க ஆவலகாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து திரிஷா தனது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிக்க : ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் நடிகர் இவரா? வைரலாகும் தகவல் இதோ!
திரிஷா நடிக்கும் படங்கள்
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக திரிஷா கலக்கி வருகிறார். உயிர் உங்களுடையது தேவி என அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சூர்யாவுடன் கருப்பு, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த 96 படத்தின் பார் 2 சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில பல காரணங்களால் அவரது திருமணம் நடைபெறவில்லை. இதற்கான காரணம் குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் அவரது திருமணம் குறித்த வதந்தி மீண்டும் பரவி வருகிறது.
இதையும் படிக்க : சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குநர் இவரா?
திரிஷா நடிப்பில் கடைசியாக தக் லைஃப் திரைப்படம் வெளியாகியிருந்தது. மணிரத்னம் இயக்கியிருந்த இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்ர்யா லெக்ஷ்மி உள்ளிட்டோருடன் திரிஷா முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். நாயகனுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்த படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் தக் லைஃப் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.