இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷாபாஷ் மித்து – எந்த ஓடிடியில் பார்க்கலாம்

Shabaash Mithu Movie OTT: இந்திய சினிமாவில் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக இந்தி சினிமாவில் வெளியான ஷபாஷ் மித்து திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ஷாபாஷ் மித்து - எந்த ஓடிடியில் பார்க்கலாம்

ஷாபாஷ் மித்து

Published: 

25 Nov 2025 21:00 PM

 IST

இந்திய சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் பலப் படங்கள் தொடர்ந்து பயோகிராஃபி படமாகவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பைசன் காளமாடன் என்ற படமும் கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னதாக இந்தி சினிமவில் கடந்த 15-ம் தேதி ஜூலை மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஷபாஷ் மித்து. இந்தப் படம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன். 2017 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவை வழிநடத்திய மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியானது ஷபாஷ் மித்து.

இந்தப் படத்தில் நடிகை டாப்ஸி பன்னு நாயகியாக நடித்து இருந்தார். இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கி இருந்த இந்தப் படத்தில் மும்தாஜ் சோர்கார், விஜய் ராஸ், பிரிஜேந்திர கலா, தேவதர்ஷினி, ஸ்வயம் ஜோஷி, சமீர் தர்மாதிகாரி, அதிதி ஆர்யன், நீரலி ஓசா, பிரியா குமாரி, ரம்யா சுரேஷ், திதீக்ஷா தாவ்டே, காஜல் ஷிஷோடியா, மனஸ்ரீ கவண்டே, வைஷ்ணவி தேசாய், ராம்சிங் பால்கோடி, ஷில்பி மர்வாஹா, அனுஸ்ரீ குஷ்வாஹா, கஸ்தூரி ஜக்னம், நிஷாந்த் பிரதான், கல்யாணி ஜா, சம்பா மண்டல், விஷக் நாயர், கீதா அகர்வால் சர்மா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

ஷபாஷ் மித்து படத்தின் கதை என்ன?

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார் டாப்ஸி பன்னு. இவரது அண்ணன் கிரிக்கெட் விளையாட வீட்டில் கொடுக்கப்படும் ஊக்கம் டாப்ஸிக்கு கொடுக்கப்படவில்லை. பல எதிர்ப்புகளைத் தாண்டி தொடர்ந்து தனது கிரிக்கெட்டை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறது.

Also Read… ஆடியோ லாஞ்ச் தொடர்ந்து வெளியாகும் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்… இணையத்தில் கசிந்த தகவல்

ஒரு பெண் விளையாட்டில் சாதிப்பது என்பது மிகவும் சாதாரண காரியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் சாதிக்க அவர் எவ்வளவு கஷ்டத்தை கடந்தார் என்பது குறித்து இந்தப் படத்தில் மிகவும் தெளிவாக காட்டப்பட்டு இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..