நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க… ரசிகர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்
Actress Rashmika Mandanna: தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் முதன் முதலில் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமா தான் இவர் தாய் வீடு என்பது போல அங்கு பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) தற்போது நடிகர் தனுஷ் (Actor Dhanush) உடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பாக இந்தப் படத்தின் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இறுதியாக இந்தியில் சிக்கந்தர் மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். பான் இந்திய அளவில் தொடர்ந்து 3 படங்களில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனைப் படைத்த நாயகி என்ற பெருமையும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு உள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான அனிமல் படம் மற்றும் 2025-ம் ஆண்டு வெளியான புஷ்பா 2, சாவா ஆகிய மூன்று படங்களும் வசூலில் சாதனைப் படைத்தது.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமீபத்திய அனுபவங்கள் குறித்து தனது கருத்தை அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ரசிகர்களுக்கு சில நல்ல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நமது வாழ்க்கையில் சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும் இந்த உலகில் நீங்கள் நண்பர்கள் என நினைக்கும் எல்லோரும் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல மனிதர்களாக இருப்பார்கள் என நினைகாதீர்கள். அது உண்மை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று உங்களின் நண்பர்களாக இருப்பவர்கள் நாளை உங்கள் நண்பர்களாக இல்லாமல் கூட போகலாம். அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த வாழ்நாள் முழுவதும் உங்களின் நண்பர்களாகவே பயணிக்கவும் செய்யலாம். ஆனால் அந்த நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் உரிமை உங்களுடையது என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
நண்பர்களைப் பற்றி அறிவுறை கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு பெற்றோரை மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தான் இந்த உலகிலேயே உங்களை அதிகமாக நேசிக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளை நீங்க மதித்து கேளுங்கள். நீங்கள் நல்லதைத் தேர்வுசெய்ய பெற்றோர்கள் நிச்சயமாக உதவுவார்கள். அதனால் அவர்கள் சொல்வதை நம்புங்கள். பெற்றோர்களை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு அவர் அறிவுறை கூறியுள்ளார்.
இது இந்த உலகில் உள்ளா எல்லா சிறுவர் சிறுமிகளுக்கு. இது உங்களுக்கான செய்தி. நீங்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். இந்த உலகில் யாரும் கெட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் உங்களுக்கு நல்லவர்களாக இல்லாமல் கூட இருக்கலாம் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.