Mamitha Baiju : என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல.. நடிகை மமிதா பைஜூ!

Mamitha Baiju About Suriya : தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் மமிதா பைஜூ. விஜய்யின் ஜன நாயகன் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவின் 46வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில், சூர்யாவுடன் புகைப்படம் கூட இடிக்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

Mamitha Baiju : என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல.. நடிகை மமிதா பைஜூ!

நடிகை மமிதா பைஜூ

Published: 

20 May 2025 19:17 PM

 IST

மலையாள சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்தவர் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் கடந்த 2024ம் ஆண்டு வெளியான ப்ரேமலு (Premalu) என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதைத் தொடர்ந்து, தமிழில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான ரெபல் (Rebel) படத்தின் மூலம் தமிழில், ஹீரோயினியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் (Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் முக்கியமான ரோலில் நடித்த வருகிறார். இவரும் மலையாளம் சினிமாவையும் கடந்து , தமிழிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக அசத்தி வருகிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடிக்கும் டியூட்(Dude) என்ற படத்தின் அறிவிப்புகள் வெளியாகியது.

இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் வணங்கான் படத்தில் ஆரம்பத்தில் சூர்யாவுடன் (Suriya) நடித்தது குறித்துப் பேசியிருந்தார். அந்த படத்திற்காக 40 நாள் ஷூட்டிங் சென்றும் நடிகர் சூர்யாவுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை மமிதா பைஜூ பேசிய விஷயம் :

அந்த வீடியோவில், நான் வணங்கான் படத்திற்காக நடிகர் சூர்யாவுடன் 40 நாட்கள் நடித்திருந்தேன். அந்த 40 நாள் ஷூட்டிங்கில் அவருடன் ஒரு புகைப்படம் கூட நான் எடுத்ததில்லை, அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆசை என்று பேசியிருந்தார்.

அவ்வாறு பேசிய நடிகை தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கவுள்ள சூர்யா 46 படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில்தான் அவர் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெயிண்டிங்கில் இருந்து வருகிறது.

சூர்யா – மமிதா பைஜூ கூட்டணி :

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த படத்தை சித்தாரா எண்டெர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யா 46 படம் வரும் 2026ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்