வடிவேலு – சரளா ஜோடி மாதிரி நாங்க இருக்க மாட்டோம்… திருமண செய்தியை நகைச்சுவையாக அறிவித்த விஷால்

Actor Vishal: நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்து அங்குதான் என் திருமணம் என்று சொல்லிக்கொண்டிருந்த நடிகர் விஷால் தற்போது தனது திருமண தேதியை அறிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வடிவேலு - சரளா ஜோடி மாதிரி நாங்க இருக்க மாட்டோம்... திருமண செய்தியை நகைச்சுவையாக அறிவித்த விஷால்

விஷால் - தன்ஷிகா

Published: 

20 May 2025 08:43 AM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்களில் ஒருவராக வலம் வந்த இவர் தற்போது தனது திருமண செய்தியை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். முன்னதாக யூடியூப் செய்திக்கு பேட்டியளித்தபோது நடிகர் விஷால் தனக்கு திருமணம் ஆகப் போகிறது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அந்த பெண் யாராக இருக்கும் என்று பல கேள்விகளும் வதந்திகளும் கிளம்பியது. இந்த நிலையில் நேற்று யோகிடா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் தான் நடிகை சாய் தன்ஷிகாவைதான் காதலிப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மேடையில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் சங்க கட்டிட வேலை:

நடிகர் விஷால் பேசியதாவது, நடிகர் சங்க கட்டிடத்தின் மேற்பார்வை எல்லாம் கார்த்தி தான் பாத்துகிறார். அவருக்கு போன் பன்னி சொன்னேன். நான் நடிகர் சங்க கட்டிட வேலை நடக்கும் இடத்தில் காலையில் 10 மணிக்கே போய் சேர் போட்டு உட்காந்துடுவேன். கட்டட வேலை முடிக்கிற வரைக்கும் நான் கிளம்ப மாட்டேன் ஏன்னா என் கல்யாணம் முடிவாகிடுச்சு என்று சொல்ல அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் சிரிக்க தொடங்கிவிட்டனர்.

நடிகர் விஷாலின் இன்ஸ்டா பதிவு:

வடிவேலு – கோவை சரளா ஜோடியா இருக்க மாட்டோம்:

தொடர்ந்து பேசிய விஷால் பொண்ணு கிடைச்சுடுச்சு… பொண்ணு வேற யாரும் இல்ல, அவங்க அப்பாவும் இருக்காங்க. அவங்க அப்பாவோட ஆசிர்வாதத்தோட சொல்றேன் அது தன்ஷிகா தான். Yes I want to.. I would love to… And I am going to Marry Dhanshika என்று மேடையிலேயே தெரிவித்தார். மேலும் கண்டிப்பா நாங்க வந்து வடிவேலு சார் – சரளா அம்மா மாதிரியான ஜோடியாக இருக்க மாட்டோம் என்றும், யோகிடா படத்தின் சண்டைக் காட்சிகளை பார்க்கும் போது நான் கொஞ்சம் சூதானமா இருக்கனும்னு முடிவு பண்ணிட்டேன் என்றும் தெரிவித்தார்.

திருமணத்திற்கு பிறகு தன்ஷிகா நடிப்பாங்களா?

நடிகர் விஷால் பேசிக்கொண்டிருந்த போது, யாரோ ஒருத்தர் கேட்டாங்க தன்ஷிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பாங்களானு கேட்டாங்க… சத்தியமா நடிப்பாங்க, அதில் எந்த ஒரு தடையும் நான் வைக்க மாட்டேன். அவங்க ரொம்ப திறமையான நபர். விஜசாந்தி மேடத்திற்கு பிறகு நான் தன்ஷிகாவைதான் பார்க்கிறேன். இவ்வளவு தத்ரூபமான சண்டைக்காட்சிகளில் அவர் நடித்துள்ளார் என்றும் விஷால் வெகுவாகப் பாராட்டினார்.