Vijay : சந்தானம் கூட இருந்தாலே கஷ்டம்தான்.. தலைவா படத்தில் அவர் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- நடிகர் விஜய்!
Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் படமானது உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து அவர் முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இவரை நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் ஒன்று தலைவா. அந்த படத்தில் சந்தானம் உடன் நடித்ததை பற்றி அவர் கூறியுள்ளார்.

நடிகர் தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) இந்திய அளவில் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கோட் (GOAT). இதை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்தார். இவர்களின் கூட்டணியில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் அவர் மகன் மற்றும் தந்தை என இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவரின் இறுதி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹச். வினோத் (H.vinoth) இயக்கி வருகிறார்.
இந்த இப்படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற படம் தலைவா. இதை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார்.
இந்த படமானது காமெடி, ஆக்ஷ்ன் மற்றும் அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் மாறுபட்ட கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்திருந்தார் மேலும் காமெடியனாக சந்தானம் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சந்தனத்துடன் இந்த படத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று கூறியிருந்தார், அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
நடிகர் விஜய் சந்தனத்தைப் பற்றிச் சொன்ன விஷயம் :
முன்னதாக பேசியிருந்த அந்த நேர்காணலில் நடிகர் விஜயிடம், தொகுப்பாளர் சந்தனத்துடன் இந்த படத்தில் எதாவது காமெடியான அனுபவம் இருந்ததா என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் விஜய், நான் தலைவா படத்தில் ஒரு சீன் என்ன, சந்தானம் கூட இருந்தாலே நடிப்பதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். சிரிப்பை அடக்கிக்கொண்டு நடிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அவருடைய மேக்கப் மேன் புச்சிபாபு தலைவா படத்தில், செப் ஆக நடித்திருந்தார். அதில் அவர் ஒரு காட்சியில் அனைவருக்கும் சமைத்தது கொடுப்பார். அந்த காட்சியில் சந்தானம் கொடுத்த பேக் டூ பேக் கமெண்ட் என்னால் மறக்க முடியாது. அவ்வளவு நான் விழுந்து விழுந்து சிரித்தேன் என்றே கூறலாம். அந்த காட்சியில் நான் நடிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்று நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.