முனிஷ்காந்த் நடிப்பில் வெளியானது மிடில் கிளாஸ் படத்தின் ட்ரெய்லர்

Middle Class Movie Trailer | தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்கள் நாயகன்களாக நடித்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது போல சின்ன சின்ன காமெடி நடிகர்கள் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

முனிஷ்காந்த் நடிப்பில் வெளியானது மிடில் கிளாஸ் படத்தின் ட்ரெய்லர்

மிடில் கிளாஸ்

Published: 

11 Nov 2025 18:49 PM

 IST

கோலிவுட் சினிமாவைப் பொருத்தவரை தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. அதன்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்களின் படங்களுக்கு மட்டுமே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது சிறிய பட்ஜெட்டில் காமெடி நடிகர்கள் முன்னணி நாயகன்களாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. விமர்சன ரீதியாக மக்களிடையே பாராட்டுகளைப் பெறுவது மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் சிலப் படங்கள் சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் முனிஷ்காந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். தமிழ் சினிமாவில் பலப் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் தற்போது கதையின் நாயகனாக இந்தப் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார்.

மிடில் கிளாஸ் வாழ்க்கையை மையமாக வைத்து காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் முனிஷ்காந்திற்கு ஜோடியாக நடிகை விஜய்லட்சுமி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த இவர் தற்போது இந்தப் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப்படத்தில்  இவர்களுடன் இணைந்து நடிகர்கள் குரேஷி, காளி வெங்கட், ராதா ரவி, கோடாங்கி வடிவேலு, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மிடில் கிளாஸ் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி:

இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்ஸஸ் பிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரிப்பாளர் தேவ் – கே.வி. துரை தயாரித்துள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கின்றனர். அனைத்தும் தோல்வியை சந்திக்க வாழ்க்கையில் என்னதான் செய்வது என்று யோசிப்பது போல அந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்த ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Also Read… அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு… இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரிந்து போட்டி போடும் போட்டியாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் படக்குழு