யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Actor Yogi Babus 300th Movie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது கதையின் நாயகனாகவும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவரது நடிப்பில் 300-வது படமாக உருவாக உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

அர்ஜுனன் பேர் பத்து

Published: 

01 Jan 2026 12:26 PM

 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் யோகி பாபு. இவர் தமிழ் சினிமாவில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். இவரது இயற் பெயர் பாபு. இந்தப் படத்தில் நடித்த பிறகே இவரை மக்கள் யோகி பாபு என்று அழைக்கத் தொடங்கினர். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்தும் படங்களிலும் இவரின் பெயர் யோகி பாபு என்றே போட்டனர். இதன் காரணமாக இவரை அனைவரும் யோகி பாபு என்றே அறிவார்கள். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபுவின் கால்ஷீட்டிற்காக பல முன்னணி நடிகர்களின் படங்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டிலும் நடிகர் யோகி பாபு பிசியான நடிகராக வலம் வந்தார். அதன்படி இவரது நடிப்பில் 2025-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 20 படங்களில் நடித்துள்ளார். இந்த 20 படங்களிலும் நடிகர் யோகி பாபுவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2025-ம் ஆண்டு பிசியாக வலம் வந்த நடிகர் யோகி பாபு தொடர்ந்து தற்போது 2026-ம் ஆண்டில் தனது 300-வது படத்துடன் தொடங்கி உள்ளார்.

யோகி பாபுவின் 300-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது:

இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகர் யோகி பாபுவின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் யோகி பாபு அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபுவின் 300-வது படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை தனது எக்ஸ் தள பதிவின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… தனுஷின் அந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது – இயக்குநர் மாரி செல்வராஜ்

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

வங்கி சேவைகள் முதல் சிம் கார்டு வரை... புத்தாண்டில் வரவிருக்கும் மாற்றங்கள்
புத்தாண்டை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.. கட்டுப்பாடுகள் என்ன?
நாடு முழுவதும் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி.. இதன் சிறப்பம்சம் என்ன?
நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!