Vijay Sethupathi : வித்தியாசமான காதல் கதை… விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டைட்டில் டீசர்!

Thalaivan Thalaivii Movie Title Teaser : தென்னிந்திய திரைப்படங்களில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரின் நடிப்பிலும் பாண்டிராஜ் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் தலைவன் தலைவி. தற்போது இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vijay Sethupathi : வித்தியாசமான காதல் கதை... விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டைட்டில் டீசர்!

தலைவன் தலைவி திரைப்படம்

Published: 

03 May 2025 18:47 PM

 IST

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் பல ஹிட் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) . இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) முன்னணி நடிகராக நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் “தலைவன் தலைவி” (Thalaivan Thalaivii). இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முன்னணி நாயகனாக நடித்துள்ளார். விடுதலை 2 படத்தை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்து நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் சிறப்பாக நடந்து வந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷனில் உருவாகியுள்ள முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான தலைவன் தலைவி படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட பதிவு :

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் செம்பியன் வினோத், ஆர்.கே. சுரேஷ், தீபா மற்றும் யோகிபாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தலைவன் தலைவி படத்தின் கதைக்களம் :

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமானது முற்றிலும் கிராமத்துக் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. மேலும் இதில் நடிகை நித்யா மேனனின் காதல் காட்சிகளும் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் பாண்டிராஜ் படம் என்றாலே சொல்லவே வேண்டாம் குடும்பம் சார்ந்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹோட்டல் உரிமையாளராக நடித்துள்ளார். அதிரடி காதல் மற்றும் காமெடி கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது.

இந்த தலைவன் தலைவி படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இறுதியாக சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியானது. அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியின் காமினேஷனில் உருவாகியுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் கட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்