சூர்யாவின் ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

Retro Movie OTT Release: பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ரெட்ரோவின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தின் புதிய ஓடிடி ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

ரெட்ரோ

Updated On: 

28 May 2025 20:32 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்தப் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றியை ருசித்ததால் அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்தார் என்பதை விட ருக்மணியாக வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி:

நடிகர் சூர்யாவின் நடிப்பில் 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1-ம் தேதி படத்தின் ஓடிடி வெளியீடு இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டனர்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதனைத் தொடர்ந்து படம் வருகின்ற 31-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டே ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் படம் 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டே வெளியாகும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியாவதற்கு முன்பு இது கேங்ஸ்டர் படமா இல்லது காதல் படமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தப் போது இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம். அதனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?