Suriya : அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. ரெட்ரோ படம் குறித்து சூர்யா நெகிழ்ச்சி!

Suriya speech in Retro Function : தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக ரெட்ரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 2025, ஏப்ரல் 18ம் தேதியில் நடந்த நிலையில், அதில் நடிகர் சூர்யா பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

Suriya : அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. ரெட்ரோ படம் குறித்து சூர்யா நெகிழ்ச்சி!

சூர்யா

Updated On: 

15 May 2025 19:28 PM

 IST

இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் (Karthi Subbaraj) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் நடிகர் சூர்யா (Suriya)  முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். முற்றிலும் விண்டேஜ் கதைக்களத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு முன் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில், வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி முடிந்த நிலையில், சூர்யா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக ரெட்ரோ படம் இருக்கிறது. இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று 2025, ஏப்ரல் 18ம் தேதியில் ரெட்ரோ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் இசை வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ படத்தில் நடித்த பலரும் கலந்துகொண்டனர். அதில் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா “ரெட்ரோ என்பது ஒரு காலத்தைக் குறிப்பது ஆகும். நானும் சினிமாவில் நுழைந்து 26, 27 வருடம் ஆகிறது என்று கூறுகிறார்கள். அந்த 27 வருடங்களில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தது இந்த ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததுதான். நான் இந்த திரைப்படத்தில் நடித்ததை குறித்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் கூறியபடி 4 மாதங்கள் மிகவும் சந்தோஷகமாக இருந்தது, அதை என்னால் மறக்க முடியாது என நடிகர் சூர்யா நிகழ்ச்சி மேடையில் உருக்கமாகப் பேசினார்.

ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவு :

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில், தற்போது முழுமையாகத் தயாராகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்திற்கு முன் இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்துதான் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் இணைந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் லப்பர் பந்து படத்தில் நடித்துப் பிரபலமான நடிகை சுவாசிகா இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ரேயா சரண் இந்த படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில், மிகவும் வித்தியாசமாக இந்த படமானது உருவாகியுள்ளது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து இதுவரை 4 பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலேயும் சூர்யாவின் ரெட்ரோ படமானது பலரின் எதிர்பார்க்கவும் இருந்து வருகிறது. மேலும் இப்படமானது வரும் மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், நிச்சயமாக சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்.... வீடியோ வைரல்
ஆதார் கார்டு நகல்களுக்கு வருகிறது தடை.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
ரயில்களில் இருக்கும் மஞ்சள், வெள்ளைக் கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது