Maaman Movie Review : பேமிலி செண்டிமெண்ட்.. மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி?

Maaman Movie Review : தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் சூரி. தற்போது இவர் ஹீரோவாக நடித்து வெளியான படம் மாமன். இந்த படம் இவர் ஹீரோவாக நடித்துள்ள 3வது திரைப்படமாகும். இன்று 2025, மே 16ம் தேதியில் இந்த படமானது வெளியாகியுள்ள நிலையில், இதன் ட்விட்டர் விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம்.

Maaman Movie Review : பேமிலி செண்டிமெண்ட்.. மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி?

சூரியின் மாமன் படம்

Published: 

16 May 2025 11:28 AM

 IST

நடிகர் சூரியின் (Soori) முன்னணி நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாமன் (Maaman). இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, கதாநாயகனாக நடித்துள்ள 3வது படம்தான் மாமன். இந்த படத்தை விலங்கு என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்  (Prashanth Pandiaraj) இயக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி ஆக்ஷ்ன் மற்றும் செண்டிமெண்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் பேமிலி செண்டிமெண்ட் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. தாய் மாமனுக்கு உண்டான உறவை எடுத்துச் சொல்லும்படி இந்த படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தில் ஓரளவு நன்றாக இருந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மாமன் படமானது தமிழகம் முழுவதும் காலை 9 மணி காட்சிகள் முதல் வெளியாகத் தொடங்கியுள்ளது. இந்த படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் இதன் டுவிட்டர் விமர்சனங்களை பற்றிப் பார்க்கலாம்.

மாமன் படத்தின் கதைக்களம் எப்படி இருக்கு ?

இந்த மாமன் படத்தின் கதையை நடிகர் சூரிதான் எழுதியுள்ளார். இதுவரை காமெடி மற்றும் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் பார்த்த சூரி, இந்த மானம் படத்தில் முழுவதும் எமோஷனல் ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை சுவாசிகா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என இருவரும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்கள்.

சூரிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை சுவாசிகா நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படத்தின் கதைக்களம் பற்றிச் சொல்லப்போனால் ஒரு தாய் மாமன், தனது அக்கா மகனுக்காகப் படும் கஷ்டங்கள் மற்றும் எமோஷனல் காட்சிகள் இந்த படத்தில் வெகுவாக இடம் பெற்றுள்ளது.

சூரியின் மாமன் படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள் :

மாமன் படமானது மக்களின் மனதை வென்றதா ?

நடிகர் சூரி இதுவரை நடித்திடாத மாறுபட்ட எமோஷனல் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை சுவாசிகாவின் கதாபாத்திரமும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறது. தாய் மாமன் உறவிற்காக நடிகர் சூரி கஷ்டப்படும் விஷயங்கள் இந்த படத்தின் பிரதான கதையாக இருக்கிறது.

மேலும் நடிகர்கள் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் சூரியின் கதாபாத்திரங்கள் அருமையாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த மாமன் படமானது ஒரு பேமிலி எமோஷனல் என்டேர்டைமென்ட் படமாக அமைந்துள்ளது. நிச்சயமாக குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்கும் அருமையான படமாக அமைந்துள்ளது இந்த மாமன் திரைப்படம்.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்