Soori : ஒரு தேங்காய் பன் வாங்கக் கஷ்டப்பட்டேன்.. ஆனால் இப்போது.. எமோஷனலாக பேசிய சூரி!

Soori Emotional Speech : வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சூரி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் முன்னணி ரோலில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் மாமன் படம் ரிலீசிற்கு காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த மேடையில் நடிகர் சூரி எமோஷனலாக பேசியுள்ளார்.

Soori : ஒரு தேங்காய் பன் வாங்கக் கஷ்டப்பட்டேன்.. ஆனால் இப்போது.. எமோஷனலாக பேசிய சூரி!

நடிகர் சூரி

Published: 

12 May 2025 19:00 PM

தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் (Soori) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மாமன் (Maaman). இந்த படத்தினை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார். இவர் நடிகர் விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இவரின் இயக்கத்தில் மிகவும் மாறுபட்ட கதைக்களமாக இந்த மாமன் படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lakshmi) நடித்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஷ்தி போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவரும் கூட, இவரின் முன்னணி நடிப்பிலும் இந்த படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024, நவம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு மே 16ம் தேதியில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சுமார் 5 மாதத்தில் இந்த படமானது ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், பல இடங்களில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

சூரியின் மாமன் திரைப்படம் :

இந்நிலையில் இதைத் தொடர்ந்து திருப்பூரில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூரி, மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார். அப்போது திருப்பூரில் இருக்கும்போது ஒரு தேங்காய் பன் வாங்கி சாப்பிடுவதற்குக் கூட அதிகம் யோசிப்பேன் என்று கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

நடிகர் சூரி எமோஷனலாக பேசிய விஷயம் :

திருப்பூரில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூரியை அவர் முன் திருப்பூரில் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்குப் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய சூரி, “ஒரு காலத்தில் நான் இங்கு வேலைபார்க்கும்போது, இங்குள்ள போக்கிரியில் தேங்காய் பன் மிகவும் அருமையாக இருக்கும். அந்த தேங்காய் பன் ஒன்றேகால் ரூபாய். அங்குச் செல்லும்போதே என்னிடம் எவ்வளவு காசு வைத்திருக்கிறேன், அதை வைத்து எத்தனை தேங்காய் பன்னை வாங்கி சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டே செல்வேன்.

ஆனால் அங்குச் சென்றவுடன் எனது மனது மாறிவிடும் வெறும் டீ மட்டும் குடிக்கலாம் என்று நினைப்பேன். எனது நண்பன் பன் வாங்கி சாப்பிடுவான், ஆனால் நான் மூன்று வேலையும் பன் வாங்கி சாப்பிட்டால் 1 ரூபாய்க்கும் மேல் செலவாகிவிடும் என்று எண்ணி டீ மட்டுமே குடிப்பேன். அந்த காசை சேமித்துத்தான் எனது வீட்டிற்கே அனுப்புவேன். ஆனால் இப்போது அதே ஊரில் எனக்குச் சிவப்பு கம்பளம் வரவேற்பு கிடைத்ததுபோல இருக்கிறது” என நடிகர் சூரி நிகழ்ச்சி மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.